நான்காவது முறையாக தலயும் நானும்...ரகசியத்தை கசிய விட்ட யோகிபாபு
சென்னை : கோலிவுட்டில் தற்போதுள்ள காமெடி நடிகர்களில் பிஸியானவர் யோகிபாபு. ஹீரோக்களுக்கு இணையாக கிட்டதட்ட ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

சில படங்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன. லாக்டவுன் முடிந்ததும் குறைந்தபட்சம் 20 இயக்குனர்கள் யோகிபாபுவை சந்தித்து கதை சொல்ல காத்திருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பல படங்கள் டாப் ஹீரோக்களின் படங்கள்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் தான் நடிப்பதை சமீபத்தில் யோகிபாபு உறுதி செய்தார். சர்கார், மெர்சல், பிகில் போன்ற படங்களில் விஜய் - யோகிபாபு காம்போ நல்ல வரவேற்பை பெற்றது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக யோகிபாபு நடிக்கிறார்.
தளபதி 65 படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்ததை போல், ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த யோகிபாபு, அஜித் நடிக்கும் வலிமை படத்திலும் தான் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் அஜித் உடன் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்.
தற்போது நான்காவது முறையாக இந்த ஆண்டு அஜித் உடன் இணைந்து நடித்துள்ளாராம். ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் உடன் இந்த படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











