யோகி பாபுன்னா அவ்ளோ கேவலமா?.. ரவி மோகன் நிகழ்ச்சியில் பாவனா பார்த்த வேலை.. திட்டும் ரசிகர்கள்!

சென்னை: உங்களை பார்க்கவே இல்லைன்னு சொல்லிட்டு யோகி பாபு அருகே வந்து விஜே பாவனா அவரிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் வரம்பு மீறியதாக உள்ளதாகவும் பாவனா தொடர்ந்து நிகழ்ச்சிகளில் இதே போன்ற மனநிலையில் தான் செயல்பட்டு வருகிறார் என்றும் சிவகார்த்திகேயனை கூட அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய விதம் சரியாக இல்லை என ரசிகர்கள் பாவனாவை கண்டபடி திட்டி வருகின்றனர்.

விஜய் டிவியில் தொகுப்பாளினிகள் ரொம்பவே பிரபலம். அந்த காலத்தில் சன் மியூசிக் விஜேக்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்தது போல விஜய் டிவியின் தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், பிரியங்கா தேஷ்பாண்டே, ஜாக்குலின், பாவனா, விஜே ரம்யா என ஏகப்பட்ட பேர் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

Yogi Babu fans roasted Vj Bhavana for doing rude on Ravi Mohan Studio launch event
Photo Credit:

விஜய் டிவியை தாண்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வரை தொகுப்பாளினியாக வளர்ந்துள்ள பாவனா சமீபத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கியது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சின்ன புள்ளத்தனமா: நிகழ்ச்சி தொடங்க மேடை ரெடியாகாத நிலையில், அதற்கு நடுவே மைண்ட் வாய்ஸ் கேமை பாவனா ஆரம்பித்தார். எஸ்.ஜே. சூர்யாவிடம் சென்று இங்கே உள்ள பிரபலங்கள் மைண்ட் வாய்ஸ் பற்றிக் கேட்டார். அவர் வில்லங்கமாக பதிலை எதிர்பார்க்க, எஸ்.ஜே. சூர்யா நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சொன்னார். என்ன சார், இப்படி சொல்றீங்க என பாவனா கேட்க, நீ சின்னப்புள்ளத்தனமா கேட்குற, நான் பெரிய மனுஷன் தனமா சொல்றேன் என பதிலடி கொடுத்தார்.

சிக்கிய சிவகார்த்திகேயன்: ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாவனாவை விட சாதாரண தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறியுள்ள நிலையில், அவரை அசால்ட்டாக, மற்றவர்களுக்கு இந்த கேம் புரியாது, சிவாவுக்கு நல்லா புரியும்னு நினைக்கிறேன் என அடுத்து அவரிடம் மைக் நீட்ட, அவர் பந்தா எல்லாம் காட்டாமல் தொகுப்பாளராகவே மாறி பேசி அசத்தினார். மேலும், இங்கே உள்ளவர்களின் மைண்ட் வாய்ஸை எல்லாம் ஓபனாக சொல்ல முடியாது, ரொம்ப கேவலமாக இருக்கும் என்றும் பேசியது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

Yogi Babu fans roasted Vj Bhavana for doing rude on Ravi Mohan Studio launch event
Photo Credit:

கடுப்பான யோகி பாபு: கடைசியாக யோகி பாபுவிடம் மைக்கை கொண்டு வந்த பாவனா, "நான் உங்களை பார்க்கவே இல்லை என பேசிக் கொண்டே வந்து, உங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன ஓடிட்டு இருக்கு எனக் கேட்க, என்னை வச்சு பண்ற படம் நல்லா வரணும்னு சொன்னதும், ரொம்ப நல்லவரா நடிக்காதீங்க என பாவனா பேசியதும் யோகி பாபு முகமே மாறிவிட்டது. ஏம்மா நான் நல்லதாத்தானேம்மா சொன்னேன், குழாய் சண்டையா போட்டேன் என யோகி பாபு பாவனாவை பஞ்சர் பண்ணிவிட்டார். கடைசியாக நீங்க நல்லவருதான் என பாவனா சொல்லும் போது கூட, அதை ஏன்மா சிரிச்சிட்டு சொல்லாம்மா, கடமைக்கு சொல்ற என்றும் யோகி பாபு முகத்துக்கு நேராகவே கேட்டு விட்டார். கடைசியாக கை கொடுப்பது போல வந்து மைக்கை கொடுங்க என பாவனா பிடுங்கிக் கொண்டு போனதை பார்த்த ரசிகர்கள் பாவனா செய்தது சரியல்ல என கண்டபடி திட்டி வருகின்றனர். ரவி மோகன் தயாரித்து இயக்கும் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இவ்ரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவில் நடித்தவர் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X