twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடியில் சம்பளம் கேட்கும் வடிவேலு.. ஆபத்பாண்டவனாக யோகிபாபுவைத் தேடி ஓடும் தயாரிப்பாளர்கள்!

    சம்பளப் பிரச்சினை காரணமாக வடிவேலு நடிக்க இருந்த படங்கள் யோகிபாபு கைக்கு மாறி வருகின்றன.

    |

    Recommended Video

    சம்பள பிரச்சினை காரணமாக வடிவேலுக்கு பதிலாக யோகி பாபுவை தேடி செல்லும் யோகிபாபு- வீடியோ

    சென்னை: சம்பள பிரச்சினை காரணமாக வடிவேலு கதாநாயகனாக நடிக்க இருந்த திரைப்படங்கள் தற்போது யோகி பாபு கைவசம் மாறி வருகின்றன.

    தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு, காமெடியில் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பது வடிவேலு தான். மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல்டைம் பேவரிட் டெம்ப்ளேட் வடிவேலு ரியாக்சன்கள் தான். அதனால், தற்போது வெளியாகும் மீம்ஸ்களில் பெரும்பாலும் வடிவேலுவை தான் பார்க்க முடிகிறது.

    ஒரு தலைமுறையையே தனது காமெடியால் சிரிக்க வைத்த மகா கலைஞன் வடிவேலு. நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு ஒலியில் அரங்கம் அதிரும்.

    திருமணமான பாஜக தலைவருடன் ஹோட்டலில் தங்கினேனா, ஆதாரம் இருக்கா?: நடிகை கோபம் திருமணமான பாஜக தலைவருடன் ஹோட்டலில் தங்கினேனா, ஆதாரம் இருக்கா?: நடிகை கோபம்

    இம்சை அரசன்:

    இம்சை அரசன்:

    காமெடியனாக மட்டுமில்லாமல், கதாநாயகனாகவும் கல்லா கட்டியவர் வடிவேலு. அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது. இதனால், அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க முன்னுரிமை கொடுக்க தொடங்கினார் வடிவேலு.

    மீண்டும் நாயகன்:

    மீண்டும் நாயகன்:

    ஆனால், அடுத்தடுத்து வடிவேலு நாயகனாக நடித்த படங்கள், பல்வேறு பிரச்சினைகளால் சரியாக ஓடவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. சிறிய இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால் அப்போதும் அவரது படங்கள் சரியாக ஓடவில்லை.

    தயாரிப்பாளர்கள் ஆர்வம்:

    தயாரிப்பாளர்கள் ஆர்வம்:

    ஆனபோதும், வடிவேலுவை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் எப்போதுமே தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு பெரும் தடையாக இருப்பது வடிவேலு கேட்கும் அதிகளவு சம்பளம் தான்.

    சம்பளப் பிரச்சினை;

    சம்பளப் பிரச்சினை;

    பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு நாள் கால் ஷீட்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார் அவர். அதே தொகையை தான் இப்போதும் கேட்கிறார். கதாநாயகனாக நடிக்கும் படங்களில் மொத்த கால்ஷீட்டை வைத்து கணக்கு போட்டு பார்த்தால், அவரது சம்பளம் ரூ.4 கோடியை தாண்டுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

    எலியல்ல புலி:

    எலியல்ல புலி:

    சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கேட்கின்றனர். ஆனால் அந்த விஷயத்தில் சிறிதும் இறங்கி வர மறுக்கிறார் வடிவேலு. 'புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனக்கோ பசியே கிடையாது' என கூறுகிறாராம் வடிவேல்.

    தர்மபிரபு யோகி பாபு:

    தர்மபிரபு யோகி பாபு:

    இதனால் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள், தர்மபிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை அப்படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். காமெடியனாக கல்லா கட்டும் யோகி பாபுவை முழுநேர ஹீரோவாக உயர்த்த சில தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    இதனால் யோகி பாபுவின் தர்மபிரபு படத்திற்கு மவுசு அதிகரித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம். படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என படக்குழு அடித்து சொல்கிறது.

    English summary
    Some producers have decided to replace Yogi Babu in Vadivelu movies, that they have planned earlier.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X