யோகி பாபுவின் கலக்கல் "காக்டெய்ல்"… மார்ச் 6ந் தேதி முதல்.. சியர்ஸ்!

சென்னை : யோகி பாபு நடித்த 'காக்டெய்ல்' திரைப்படம் வரும் மார்ச் 6ந்தேதி வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு அதில் நிரந்தரமாக நீடித்துக் கொண்டு இருப்பது. மிகவும் கடினம் அப்படி நீண்ட நாள் காமெடியில் கலக்கியவர்களில் ஒருவர் தான் யோகி பாபு.

Yogi Babus Cocktail march 6th release

தான் நடித்த முதல் திரைப்படமான யோகியில் நடித்த பிறகு அப்படத்தின் பெயரையே தன் பெயரில் இணைத்து யோகி பாபு என்று மாற்றி கொண்டார். முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளுசபாவில் நடித்தார் யோகி பாபு. அத்தொடரின் இயக்குநர் ராம் பாலா அவரை ஜீனியர் ஆர்டிஸ்டாக பின்னாளில் நடிக்க வைத்தார். பல சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் புதுமுக நடிகர் மற்றும் புதுமுக ஹீரோக்கள் படங்களுக்கு என்று நேரத்தை ஒதுக்கி அவர்களுக்காக படங்களில் நடித்து கொடுக்கிறார் யோகி பாபு.

Yogi Babus Cocktail march 6th release

இவர் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது இப்படத்திற்கு 'காக்டெய்ல்' என்று தலைப்பு வைத்தனர். இப்படத்தை ரா. விஜய முருகன் இயக்குகிறார். பி. ஜி. முத்தையா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் பின் தான் யோகி பாபுவிற்கு கல்யாணம் ஆனது. கல்யாணம் முடிந்த கையோடு ஷூட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வந்தார் யோகி பாபு. ஷூட்டிங் ஸ்பாட்ல் தனுஷ் இவருக்கு கல்யாண பரிசாக தங்க செயினை வழங்கினார்.

Yogi Babus Cocktail march 6th release

கல்யாணத்திற்கு பிறகு இவர் ஹீரோவாக நடித்து வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வித்தியாசமான கதைகளை யோகி பாபு தேர்ந்து எடுத்து நடித்து வருவதால் ரசிகர்கள் இவரை அதிகம் ரசிக்கிறார்கள்.

யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் 'விஜய் டிவி கலக்கப்போவது யாரு' புகழ் பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இந்திய சினிமாவில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெய்ல்' என்ற கிளி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.

Recommended Video

Yogi Babu Marriage Video | Yogi Babu | Yogi Babu- Manju Parkavi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X