பீஸ்ட் படத்திற்காக யோகிபாபு என்ன காரியம் செய்தார் தெரியுமா...மிரண்டு போன படக்குழு

சென்னை : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக படுபிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது யோகிபாபு தான். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் நவரசா ஆந்திராலஜியில் டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கிய சம்மர் ஆஃப் 92 பாகத்தில் நடித்து முடித்தார். அதை முடித்து விட்டு டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் லீட் ரோலில் நடிக்கும் ஏவி 33 படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் ஷுட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

ரசிகருக்கு பதிலளித்த யோகிபாபு

ரசிகருக்கு பதிலளித்த யோகிபாபு

இதில் கலந்து கொண்டு நடித்து வந்த யோகிபாபுவிடம் ரசிகர் ஒருவர், எப்போது பீஸ்ட் பட ஷுட்டிங்கில் கலந்து கொள்ள போகிறீர்கள் என ட்விட்டரில் கேட்டுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு தவறாமல் பதிலளிக்கும் வழக்கம் கொண்ட யோகிபாபு, இப்போதும் ஆகஸ்ட் 11 முதல் கலந்து கொள்ள போகிறேன் என பதிலளித்துள்ளார்.

 500 கிமீ பயணித்த யோகிபாபு

500 கிமீ பயணித்த யோகிபாபு

ஏவி 33 படத்தின் ஷுட்டிங்கிற்காக ராமேஸ்வரத்தில் இருந்த யோகிபாபு, உடனடியாக கிளம்பி, 500 கி.மீ., பயணம் செய்து சென்னை வந்துள்ளார். பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக தான் அவர் உடனடியாக கிளம்பி வந்துள்ளார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

 மிரண்டு போன படக்குழு

மிரண்டு போன படக்குழு

பீஸ்ட் படத்தில் ஐந்தாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் யோகிபாபு. ஏற்கனவே விஜய் நடித்த வேலாயுதம், சர்க்கார், மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டி ஆகி இருந்தாலும், அவற்றில் சொன்னபடி நடித்து கொடுப்பதற்காக 500 கி.மீ., பயணம் செய்து வந்து, உடனேயே ஷுட்டிங்கில் கலந்து கொண்ட யோகிபாபுவின் செயலை பார்த்து பீஸ்ட் படக்குழு மிரண்டு போய் உள்ளது.

ஓவர் பிஸியான யோகிபாபு

ஓவர் பிஸியான யோகிபாபு

சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3, அஜித் நடிக்கும் வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. ஒரே சமயத்தில் எப்படி இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள் என்று கூட பலர் யோகிபாபுவிடம் கேட்டு வருகின்றனர்.

விரைவில் விஜய்யும் இணைவார்

விரைவில் விஜய்யும் இணைவார்

பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட ஷுட்டிங்கில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாகோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் விஜய்யும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
விரைவில் ரஷ்யா பயணம்

விரைவில் ரஷ்யா பயணம்

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அடுத்த சில நாட்களில் சென்னையில் ஷுட்டிங்கை முடித்து விட்டு க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X