தேங்க்யூப்பா...கலாய்த்த ரசிகருக்கு கூலாக பதில் சொன்ன யோகிபாபு

சென்னை : சோஷியல் மீடியாவில் தன்னை கலாய்த்து கமெண்ட் செய்த ரசிகருக்கு, தேங்க்யூப்பா என கூலாக பதில் சொல்ல, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் ஆதவையும் பெற்று விட்டார் யோகிபாபு. இவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தை பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்கள் ஹீரோவாகி விட்டதால் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு, தமிழில் விஜய், அஜித் போன்றோருடன் மட்டுமின்றி இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் யோகிபாபு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

தளபதி 66 ல் யோகிபாபு

தளபதி 66 ல் யோகிபாபு

இந்த சமயத்தில் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்திலும் யோகிபாபு இணைந்துள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் யோகிபாபுவும் கலந்து கொண்டுள்ளார். விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், ஷாம், யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

நீ நடிச்ச 3 படமும் ஃபிளாப்

நீ நடிச்ச 3 படமும் ஃபிளாப்

தளபதி 66 படத்தில் தான் இணைந்துள்ள தகவல் பற்றிய ஃபேன் மேட் போஸ்டரை யோகிபாபு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதனை பலர் பாராட்டி, லைக் செய்து, கமெண்ட் செய்து வந்தனர். இதில் ரசிகர் ஒருவர், நீ விஜய் கூட நடிச்ச படம் 3. அத்தனை படமும் பிளாப். சர்கார் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அவுட், பிகில் படத்தில் அட்லி அவுட், பீஸ்ட் படத்தில் நெல்சன் அவுட். அடுத்து தொடருங்க என கமெண்ட் செய்திருந்தார்.

யோகிபாபுவின் கூல் பதில்

யோகிபாபுவின் கூல் பதில்

அந்த ரசிகருக்கு, தேங்க்யூப்பா என கூலாக பதிலளித்துள்ளார் யோகிபாபு. இதை பார்த்த நெட்டிசன்கள், அந்த ரசிகரை விட்டு விளாசி வருகிறார்கள். பிகில் படத்தில் அட்லி அவுட் இல்ல. அப் தான். இப்போ ஷாருக்கான் வைத்து படம் எடுக்கிறார். நெல்சனும் அவுட் இல்ல. அப் தான். அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்க போகிறார். சர்கார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து தர்பார் படம் இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால அதுவும் அப் தான். மொத்தத்துல நீ தான்டா அவுட்.

 விளாசும் நெட்டிசன்கள்

விளாசும் நெட்டிசன்கள்

டேய்...சர்கார், பிகில் படம் உனக்கு ஃபிளாப்பா. ரெண்டும் பிளாக்பஸ்டர். 250 கோடி, 300 கோடி வசூல் செய்த படங்கள். உனக்கு தான் அந்த படங்கள் ஃபிளாப். ஆனால் அந்த படங்களின் வெற்றியை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். யோகிபாபுவும் ஃபர்ஸ்ட் தமிழில் மட்டும் தான் நடித்துக் கொண்டிருந்தார். இப்போ பாலிவுட்டிற்கும் சென்று விட்டார். அதனால் யாரை பற்றியாவது கமெண்ட் செய்வதற்கு முன் முழுவதுமாக விஷயம் தெரிந்து கொண்டு பேசு என எச்சரித்துள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X