twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மண்டேலா... இனி யோகிபாபுவின் ரேஞ்சே வேற லெவல்!

    |

    சென்னை : யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    யோகி பாபுவின் மண்டேலா, ஜோஜு ஜார்ஜ் நடித்த நாயட்டு, வித்யா பாலனின் நடித்த ஷெர்னி உள்பட 14 படங்கள் தேர்வாகி உள்ளன.

     படு கவர்ச்சியில் ஈஸ்வரன் பட நடிகை..பாக்க மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே ! படு கவர்ச்சியில் ஈஸ்வரன் பட நடிகை..பாக்க மெழுகு சிலை மாதிரி இருக்கீங்களே !

    இந்த திரைப்படங்கள் கொல்கத்தாவில் திரையிடப்பட உள்ளன.

    மடோன் அஸ்வின்

    மடோன் அஸ்வின்

    இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்த மண்டேலா திரைப்படத்தை புதுமுக இயக்குனர மடோன் அஷ்வின் இயக்கிஉள்ளார். இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    நேரடியாக டிவியில்

    நேரடியாக டிவியில்

    இத்திரைப்படம் ஏப்ரல் 4ந் தேதி நேரடியாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி இப்படத்தில் சாமானியன் ஒருவரின் ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் எடுத்துரைத்தது. இப்படத்தில் யோகி பாபு முடித்திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார்.

    மிகப்பெரிய வசூல்

    மிகப்பெரிய வசூல்

    மண்டேலா படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை ஸ்மைல், இளிச்சவாயன் என அழைக்கப்படும் யோகி பாபு அதன் பின் மண்டேலா, நெல்சன் மண்டேலா என அழைக்கப்படுகிறார். மற்றவர்களின் முடியைத் திருத்தி அவர்களை அழகாக்கும் மண்டேலா, கிழிந்த அழுக்கான சட்டை, பேண்ட், எண்ணெய் வைக்காத தலை முடி, எண்ணெய் வடியும் முகம் என மிகச் சாதாரண மனிதனாக அவரது கதாபாத்திரத்தில் மிளிர்ந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வசூலை வாரி குவித்து இருக்கும்.

    மண்டேலா ஆஸ்கருக்கு

    மண்டேலா ஆஸ்கருக்கு

    இந்நிலையில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் மண்டேலா ஆகும். மேலும், ஜோஜு ஜார்ஜ் நடித்த நாயட்டு திரைப்படமும், வித்யா பாலனின் நடித்த ஷெர்னி மற்றும் விக்கி கவுஷல் நடித்த சர்தார் உதம் உள்ளிட்ட திரைப்படமும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    அடுத்த ஆண்டு

    அடுத்த ஆண்டு

    ஆஸ்கர் விருது வழக்கும் விழா மார்ச் 2022 அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு சிறந்த படங்களை தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஷாஜி என் கருண் நடுவர் மன்றத்தின் தலைவராக உள்ளார். இந்த குழுவில் 15 நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் பல்வேறு மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்கள் கொல்கத்தா பவானிபூரில் பிகோலி திரையரங்கில் திரையிடப்படும். இதில் தேர்வு செய்யும் படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்புவார்கள்.

    English summary
    Comedy Actor Yogibabu’s Mandela Movie selected for Oscar 2022
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X