அட...யோகிபாபுவா இது...ரசிகர்களை குஷிப்படுத்த இப்படி மாறிட்டாரே
சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த சில காலங்களாகவே காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர்களாக அறிமுகமாகி, புகழடைந்த பிறகு ஹீரோவாகி வருகின்றனர்.

வடிவேலு, சந்தானம் ஆகியோர்கள் ஹீரோ ஆன பிறகு காலியாக உள்ள சிறந்த காமெடியன்களுக்கான வெற்றிடத்தை நிரப்பி வருகிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவின் சிறந்த காமெடியனாகவும் இருந்து வருகிறார் யோகிபாபு.
யோகிபாபுவின் டைமிங் காமெடி, நகைச்சவை உணர்வு ஆகியன ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு இணையாக பிஸியான பல படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு. சமீபத்தில் இவர் நடித்த நவரசா வெப்சீரிஸ் சமீபத்தில் ஓடிடி.,யில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், அருண் விஜய் நடிக்கும் ஏவி 33 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு. இதற்காக பல ஊர்களுக்கும் அசராமல் பயணம் செய்து பல படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை யோகிபாபு.
சோஷியல் மீடியாவிலும் மற்ற பிரபலங்களை போலவும் ஆக்டிவாக இருக்கும் யோகிபாபு, ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவ்வப்போது ஏதாவது ஃபோட்டோவை பகிர்ந்து வருகிறார். அப்படி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள ஃபோட்டோ, பலரின் மனங்களை கவர்ந்துள்ளது.
கிருஷ்ணர் கெட்அப்பில் வேடமிட்டு, யோகிபாபு எடுத்த ஃபோட்டோ தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மற்ற பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுக்கு தான் கிருஷ்ணர் வேடமிட்டு, அந்த ஃபோட்டோவுடன் வாழ்த்து பதிவிட்டனர். ஆனால் யோகிபாபு தானே கிருஷ்ணர் போல் வேடமிட்டு, அனைவரையும் அசத்தி உள்ளார்.
இதை யோகிபாபு பதிவிட்டதுமே இந்த ஃபோட்டோ வைரலாக துவங்கி விட்டது. அவரது ரசிகர்கள் பலர் இந்த ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர். அழகிய படங்களால் கமெண்ட் பகுதியையே நிரப்பி விட்டனர்.


Click it and Unblock the Notifications











