»   »  ஐடி நிறுவனங்களில் நிலவும் ஈகோ பிரச்சினைகளை வைத்து உருவாகும் யூகன்!

ஐடி நிறுவனங்களில் நிலவும் ஈகோ பிரச்சினைகளை வைத்து உருவாகும் யூகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐ.டி. நிறுவனங்கள் என்றாலே உடனே மன அழுத்தம், செக்ஸ் தொல்லை, கூட்டு வன்புணர்வு போன்றவற்றைத்தான் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள் பலரும்.

ஐடி நிறுவனப் பிரச்சினைகளை வைத்து வெளியாகும் பேய்ப் படம் என்ற அறிவிப்போடு நேற்று நடந்த யூகன் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, அதன் இயக்குநர் மற்றும் நடிக, நடிகையிடமும் இதே கேள்விகளைத்தான் நிருபர்கள் கேட்டனர்.

ஆனால் இவற்றுக்கெல்லாம் நோ என்ற ஒற்றை பதில் சொன்ன இயக்குநர், கடைசியில் கதையின் முடிச்சு என்னவென்பதைச் சொல்லிவிட்டார்.

ஐடி நிறுவன ஈகோ

ஐடி நிறுவன ஈகோ

ஐடி நிறுவனங்களில் மேற்சொன் பிரச்சினைகளைவிட பெரிய பிரச்சினை ஈகோ மோதல்கள்தான். பணியாளர்களுக்கு இடையில் நிலவும் ஈகோ மோதல். உயரதிகாரிகளுக்கும் அவர்களுக்கு கீழுள்ளவர்களுக்கும் நடக்கும் மோதல்தான் கதையாம். அதன் விளைவாக படத்தின் நாயகி பேயாகி பயமுறுத்துவதுதான் கதையாம்.

வித்தியாசமான பேய்

வித்தியாசமான பேய்

படத்தின் இயக்குநர் கமல் குமார். கோவில்பட்டிக்காரர்.

வருஷம் பூரா தமிழ் சினிமாவில் இப்போது பேய்கள்தானே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன.. இது எப்படிப்பட்ட பேய் என்ற கேள்விக்கு கமல் குமார் பதிலளிக்கையில், "ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இதுவரை வந்த எந்த பேய்ப் படத்தின் சாயலும் என் படத்தில் இருக்காது. நிச்சயம் வித்தியாசமான அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்," என்றார்.

சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால். பெங்களூர் பொண்ணு என்றாலும், படித்தது சென்னையில். தமிழ் சரளமாகப் பேசுகிறார். அண்ணா பல்கலைக் கழத்தில் இரட்டை பொறியியல் பட்டம் பெற்றவர் என்ற தகவலை அவரே சொன்னபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

"எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். அதான் எனக்குப் பிடிச்ச தொழிலைத் தேர்ந்தெடுக்கிட்டேன்," என்கிறார் இந்த ஸ்மார்ட் நடிகை.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக யாஸ்மித், சித்து, ஷாம் கீர்த்தி வாசன், பிரதீப் பாலாஜி, ஆயிஷா, தருண் சக்ரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் நடிக்கிறார்கள். எல்லாருமே புதுமுகங்கள்.

எடிட்டிங்

எடிட்டிங்

படத்தை இயக்குவதோடு எடிட்டிங் பணியையும் கவனிக்கிறார் கமல் குமார். எடிட்டிங்தான் ஒரு இயக்குநரை சரியாக நிலை நிறுத்தும் என்பதால், வேறு எடிட்டரைப் போடவில்லையாம்!

ஏப்ரலில்

ஏப்ரலில்

படத்தை முழுவதும் முடித்துவிட்டார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பை சிவகாசியில் நடத்தியிருக்கிறார் கமல்குமார். ஏப்ரல் இறுதியில் திரைக்கு கொண்டு வரப் போகிறார்களாம்.

Read more about: yoogan, யூகன்
English summary
Yoogan is a new Tamil movie directed by Kamal Kumar with the background of ego clashes in IT industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil