நீங்க ஒண்ணும் குழந்தை இல்லை.. ராஜுவை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிலாவது கடைசி வரை ராஜு செல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இவ்வளவு விரைவாக ராஜு வெளியேறியது கடுப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் செய்த செயல்களை வைத்தே ரசிகர்களை பெற்று விட்ட ராஜு ஜெயமோகன் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் தப்பித்து வருகிறார்.

இந்நிலையில், பெயின்ட் முட்டை அடிக்கும் டாஸ்க்கிலும் ராஜு தன் மீதே 4 முட்டைகளை அடித்து சொதப்பல் ஆட்டம் ஆடினார்.

ஓவர் கான்ஃபிடன்ஸ்

ஓவர் கான்ஃபிடன்ஸ்

எப்படி விளையாடினாலும் நமக்கு தான் பிக் பாஸ் டைட்டில் கிடைக்கப் போகுது என்பதை தெரிந்து வைத்துக் கொண்ட ராஜு பஸ்சில் இருந்து இறங்கியதை போலவே இந்த டாஸ்க்கிலும் தன் மீது தானே முட்டைகளை வீசி அவுட் ஆகி வெளியேறியது பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

பாவனியுடன் மட்டும் மோதல்

பாவனியுடன் மட்டும் மோதல்

நேற்றைய போட்டியில் பாவனியுடன் அந்த அளவுக்கு மோதிய ராஜு இன்றைய போட்டியில் அமீர், சிபி, பிரியங்கா மற்றும் சஞ்சீவை காலி செய்ய வேண்டும் என நினைத்து விளையாடவே இல்லை. ஆரம்பத்தில் ராஜு பிரியங்கா, சிபியை டார்கெட் பண்ணாலும் கடைசியில் அவர் டோட்டலாகவே சேஞ்ச் ஆகி விட்டார்.

பிரியங்கா பண்ண ட்விஸ்ட்

பிரியங்கா பண்ண ட்விஸ்ட்

விளையாட வேண்டும் என நினைத்து ஆரம்பித்த ராஜுவை பிரியங்கா ட்விஸ்ட்டாக பேசி நாமினேஷனுக்கு முன்னாடி ரொம்ப நாளைக்கு முன்னாடி அதாவது ஷோ ஆரம்பித்த போது நீ பயந்த அதை காரணமாக வைத்து உன் மீது முட்டை அடிக்கிறேன் என பேச அதனால் கடுப்பான ராஜு தன் மீதே முட்டைகளை அடிக்க ஆரம்பித்து விட்டார்.

நீங்க ஒண்ணும் குழந்தை இல்லை

நீங்க ஒண்ணும் குழந்தை இல்லை

தவறாக ஒரு முட்டையை வீணாக்கி விட்டேன் அதை மீண்டும் பயன்படுத்த முடியுமா என ராஜு தன் மீது முட்டையை அடித்த பின்னர் பிக் பாஸிடம் கெஞ்ச "ராஜு நீங்க ஒண்ணும் குழந்தை இல்லை" சரியாக முடிவெடுத்து உங்க கேமை விளையாட வேண்டும் என வார்ன் பண்ணி விட ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ராஜுவை பார்த்து சிரித்து விட்டனர்.

டாஸ்க்கின் பிளானே

டாஸ்க்கின் பிளானே

பிரியங்கா மற்றும் ராஜுவை வெளியேற்றும் விதமாகவே இந்த டாஸ்க்கை பிக் பாஸ் டீம் வடிவமைத்தது போல இருக்கிறது தெளிவாக தெரிகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரியங்கா மற்றும் ராஜுவை நோக்கி முட்டைகளை வீசும்படியே கேள்விகள் கேட்கப்பட்டதே ராஜு கடுப்பாக காரணம் எனக் கூறப்படுகிறது.

மக்கள் மீது நம்பிக்கை

மக்கள் மீது நம்பிக்கை

விளையாடலாம் என முடிவெடுத்து வந்த ராஜு எப்படி ட்விஸ்ட் பண்ணாலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி தனது திறமை நிரூபித்து இருக்க வேண்டும். ஆனால், சிலர் பேசுவதை கேட்டு கடுப்பாகி தன் மீதே முட்டைகளை அடித்து டிக்கெட் டு ஃபினாலேவில் இருந்து வெளியேறியது தப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் தன்னை ஃபினாலேவுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் என ராஜு வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வீணாகது என்று தான் தெரிகிறது.

அமீருக்குத்தான்

அமீருக்குத்தான்

சஞ்சீவ், சிபி மற்றும் அமீர் ஆகிய மூவரும் நாளை டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் இறுதி போட்டியில் மோத போகிறார்கள். கடைசி வரை போராடி தோற்கும் ஒரு நபர் அதிகபட்சம் சஞ்சீவ் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மரியாதை உடன் வெளியேற்றப்படுவார். சிபி அல்லது அமீர் டிக்கெட் டு ஃபினாலேவை தட்டிச் செல்வார். அமீர் வெல்லும் விதமாகவே அடுத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X