»   »  நீங்க அஜீத் இல்ல, காணாமல் போய்டுவீங்க: ஜெய்யை கண்டித்த தயாரிப்பாளர் சிவா

நீங்க அஜீத் இல்ல, காணாமல் போய்டுவீங்க: ஜெய்யை கண்டித்த தயாரிப்பாளர் சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய் ஒன்றும் அஜீத் அல்ல. அவர் இப்படியே செய்தால் காணாமல் போய்விடுவார் என்று தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு சிவா, ஜெய், வைபவ், மஹத், விஜயலட்சுமி, பிரேம்ஜி, தயாரிப்பாளர் சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்டோரை வைத்து சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தை வெங்கட் பிரபு மற்றும் சரண் தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

ஜெய்

ஜெய்

பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ளவில்லை. ஜெய் பட நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் சிலர் பட விழாக்களை புறக்கணித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

சிவா

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சிவா பேசுகையில், அஜீத் சார் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அதை நானே முன்பு விமர்சித்தேன். அவர் பட நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதால் அவருடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது என்பதை லேட்டாக புரிந்து கொண்டேன் என்றார்.

அஜீத்

அஜீத்

அஜீத்தை பட நிகழ்ச்சிகளில் அல்ல திரையில் மட்டுமே பார்க்க முடியும். அதுவும் அவர் ஒரு நிலைக்கு வந்த பிறகே இந்த முடிவை எடுத்தார். ஆனால் சில நடிகர்கள் துவக்க காலத்திலேயே அவரை போன்று முடிவு எடுத்தால் காணாமல் போய்விடுவீர்கள் என்று கண்டித்தார் சிவா.

திருந்த வேண்டும்

திருந்த வேண்டும்

அஜீத் கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். அவர் இடத்திற்கு வர கடுமையாக உழைக்க வேண்டும். நான் யாரையும் திட்டுவதற்காக சொல்லவில்லை. நான் ஜெய்யை பற்றி தான் பேசுகிறேன். அவர் தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார் சிவா.

English summary
Producer Siva warned Jai to mend his ways saying that he is not Ajith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil