இந்திய சினிமாவின் வீரப்பன் நீங்க.. கேஜிஎஃப் 2 இயக்குநரை இப்படி பாராட்டியது யார் தெரியுமா?
பெங்களூரு: இயக்குநர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பிரபல இயக்குநர் கேஜிஎஃப் 2 இயக்குநர் பிரசாந்த் நீலை இந்திய சினிமாவின் வீரப்பன் என்றே பாராட்டி உள்ளார்.
பாலிவுட்டில் தங்கல் திரைப்படம் பண்ண வசூல் சாதனையையே முறியடித்து இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் பெற்ற இரண்டாவது படமாக கேஜிஎஃப் 2 மாறி உள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வசூலையும் கேஜிஎஃப் 2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்கள் தினம்
சர்வதேச இயக்குநர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜிஎஃப் 2 படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீலை பாராட்டும் வகையில் போட்டிருக்கும் ட்வீட் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. அவர் தனது ட்வீட்டில் Un Happy Directors Day என குறிப்பிட்டு இப்படியொரு பதிவை போட்டிருந்தார்.

இந்திய சினிமாவின் வீரப்பன்
கேஜிஎஃப் 2 படத்தை இயக்கி டன் கணக்கில் வசூலை வாரிக் குவித்து இருக்கும் பிரசாந்த் நீல் இந்திய சினிமாவின் வீரப்பன் என குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. வீரப்பன் படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா, கர்நாடக இயக்குநரை அப்படியொரு பெயரை வைத்து பாராட்டி இருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சந்தோஷமில்லை
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் மற்றும் சாண்டில்வுட் இயக்குநர்களுக்கும் இந்த இயக்குநர் தினம் நிச்சயம் சந்தோஷத்தை கொடுத்திருக்காது. அந்த அளவுக்கு ஒரு மரண பயத்தை கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் உருவாக்கி விட்டீர்கள் என மனதார பாராட்டி உள்ளார். பல படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை கேஜிஎஃப் 2 முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாகுபலி 2 சாதனை மட்டுமே எஞ்சியுள்ளது.
Recommended Video

ஒரு வழியாக ரிலீஸ்
கடந்த மாதமே தனது லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்து அதற்கான புரமோஷன்களை செய்து வந்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஆனால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அந்த் படத்தை வாங்கி வெளியிட மாட்டோம் என அதிரடியாக அறிவித்த நிலையில், படத்தின் ரிலீஸ் நின்று போனது. இந்நிலையில், நாளை மே 6ம் தேதி டேஞ்சரஸ் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











