»   »  ரிலையன்ஸ் நிறுவன வெற்றியின் ரகசியம் என்ன?: ஷாருக்கானிடம் கூறிய அம்பானியின் மகன்

ரிலையன்ஸ் நிறுவன வெற்றியின் ரகசியம் என்ன?: ஷாருக்கானிடம் கூறிய அம்பானியின் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரிலையன்ஸ் நிறுவன வெற்றி ரகசியத்தை ஷாருக்கானிடம் உடைத்த அம்பானி மகன்- வீடியோ

மும்பை: என் முதல் சம்பளத்தை கேட்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள் என்று தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் தெரிவித்துள்ளார். மேலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் வெற்றியின் ரகசியத்தையும் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது நாடே அறிந்தது. அவருக்கு ஆகாஷ், ஆனந்த் என்று 2 மகன்களும், இஷா என்ற மகளும் உள்ளார்.

இதில் ஆனந்த் ரொம்பவே குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அம்பானி அளித்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கானும், ஆனந்த் அம்பானியும் தங்களின் முதல் சம்பளம் பற்றி பேசியுள்ளனர்.

சம்பளம்

சம்பளம்

என் முதல் சம்பளம் வெறும் 50 ரூபாய் தான் என்று ஷாருக்கான் ஆனந்திடம் கூறியுள்ளார். ஆமாம், உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என ஷாருக் ஆனந்திடம் கேட்டுள்ளார்.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

என் முதல் சம்பளத்தை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள் என்று ஆனந்த் ஷாருக்கானிடம் கூறியுள்ளார். அப்படி என்ன சம்பளம் வாங்கினார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசியம்

ரகசியம்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் வெற்றியின் ரகசியத்தை ஆனந்த் ஷாருக்கானிடம் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸில் நாங்கள் எளிமையை கடைபிடிக்கிறோம். நான் தலைமைப் பண்பை ஊக்குவிக்கிறோம், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டாடுகிறோம். இதுவே எங்கள் வெற்றியின் ரகசியம் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.

English summary
Shahrukh Khan revealed his first salary to Anant Ambani and asked about his first payment. For that Anant replied, 'Leave it. You will feel a little embarrassed if I tell you my first salary'. Anant revealed the secret of Reliance industries to SRK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X