»   »  நிரூபிச்சுட்டப்பான்னு தலைவர் சொன்னாரே: துள்ளிக் குதிக்கும் அருண் விஜய்

நிரூபிச்சுட்டப்பான்னு தலைவர் சொன்னாரே: துள்ளிக் குதிக்கும் அருண் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றம் 23 படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து பாராட்டியதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள த்ரில்லர் படம் குற்றம் 23-ஐ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். படத்தை பார்த்து முடித்த பிறகு அவர் அருண் விஜய்க்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.


You Proved it: Rajini appreciates Arun Vijay

இது குறித்து அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,


இது தான் என் வாழ்க்கையில் மிகவும் அருமையான தருணம். சூப்பர் ஸ்டார் என் படத்தை பார்த்துவிட்டு இம்பிரஸ் ஆகியுள்ளார். அவர் எனக்கு போன் செய்து நான் சிறப்பாக நடித்துள்ளதாக பாராட்டினார்.


நீங்க தான சார் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தீர்கள் என்று ரஜினி சாரிடம் கூறினேன். அதற்கு அவர் நிரூபிச்சுட்டப்பா என்று கூறினார். இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும் என்றார்.English summary
Arun Vijay tweeted that, 'Thalaivar called! Congratulated on my matured performance n body language.. he loved da concept & making. His actual words "you proved it.."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil