twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டரில் ரிலீஸாகியிருந்தால் திருவிழாவாயிருக்கும்.. சூரரைப்போற்று குறித்து இளம் விமர்சகர் அஷ்வின்!

    |

    சென்னை: சூரரைப்போற்று திரைப்படம் குறித்து இளம் யூடியூப் விமர்சகரான அஷ்வின் ரிவ்வியூ கொடுத்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் படம் சூரரைப்போற்று. நேற்று முன்தினம் அமேஸான் பிரைமில் இந்த திரைப்படம் ரிலீஸானது.

    படத்தை பார்த்த பலரும் சூர்யாவின் நடிப்பையும் இயக்குநரின் நேர்த்தியையும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    யூடியூபர் விமர்சனம்

    யூடியூபர் விமர்சனம்

    இந்நிலையில் யூடியூப் விமர்சகரான அஷ்வின் படம் குறித்த தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது, ஏர் ஃபோர்ஸில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியாக உள்ளார் சூர்யா. அப்போது தனது அப்பா சீரியஸாக இருப்பதாக தகவல் வருகிறது.

    பிளைட்டில் போனால்..

    இதனால் உடனடியாக போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் சூர்யா. பிளைட்டில் போனால் நிச்சயம் அப்பாவை உயிரோடு பார்த்துவிடலாம் என பிளைட்டில் போக முயற்சி செய்கிறார். ஆனால் கட்டணம் அதிகமாக உள்ளதால் தெரிந்தவர்களிடம் உதவி கேட்கிறார்.

    யாருக்கும் நடக்கக்கூடாது..

    யாருக்கும் நடக்கக்கூடாது..

    ஆனால் யாரும் முன்வரவில்லை. அவர் போவதற்குள் அப்பா இறந்துவிடுகிறார். இதனால் எல்லாம் முடிந்த பிறகு ஏன் வந்தாய் என கதறுகிறார் ஊர்வசி. இதுபோன்று இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று எண்ணும் சூர்யா, கிராம மக்களும் பயன்படும் வகையில் பிளைட் சேவையை தொடங்க முயற்சி செய்கிறார்.

    பெரும் வெற்றி

    பெரும் வெற்றி

    அதன்பிறகு அவரது கனவு நனவாகிறதா? எப்படி சாதிக்கிறார்? என்ன நடக்கிறது என்பதை அத்தனை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா. சூர்யாவை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் சுதா கொங்கரா.
    2013ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகராக பெரிய வெற்றியை பார்க்காத சூர்யா தயாரிப்பாளராக வெற்றி பெற்றார். ஆனால் சூரரைப்போற்று படத்தின் மூலம் ஒரு நடிகராக பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

    டீம் வொர்க் வெற்றி

    டீம் வொர்க் வெற்றி

    மோகன் பாபு, ஊர்வசி உட்பட படத்தில் நடித்துள்ள அத்தனை பேருமே அவ்வளவு சிறப்பாக தங்களின் வேலையை செய்திருக்கின்றனர். இந்தப் படம் மதுரை, விஜயவாடா, டெல்லி என பல இடங்களில் காட்சியாக்கப்பட்டுள்ளது. டீம் வொர்க் கிடைத்த 100 % வெற்றிதான் சூரரைப்போற்று படம்.

    தியேட்டரில் ரிலீஸாகியிருந்தால்..

    தியேட்டரில் ரிலீஸாகியிருந்தால்..

    இறக்குடா ஃபிளைட்ட உள்ளிட்ட டயலாக்குகள் சிறப்பு. இந்தப் படத்தில் தனது மைனஸை எல்லாம் சரிசெய்து பக்காவாக வெளிப்பட்டிருக்கிறார் சூர்யா. சூரரைப்போற்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் திருவிழாதான்.
    பாடல்கள் அனைத்தும் சிறப்பு, பிஜிஎம்மில் ஸ்கோர் செய்துள்ளார் ஜிவி பிரகாஷ். எத்தனை முறை பார்த்தாலும் நிச்சயம் போரடிக்காது.

    அனைவரையும் கவர்ந்துள்ளார்

    அனைவரையும் கவர்ந்துள்ளார்

    எனக்கு 2008ல் ட்ராவல் பண்ணுவது போன்று இருந்தது. பழைய சூர்யாவை காண்பித்துள்ளார் சுதா மேடம். தமிழ் ஆடியன்ஸ், ஜென்ரல் ஆடியன்ஸ், ஆந்திர ஆடியன்ஸ் என பலரையும் கவர் செய்துள்ளார். டயலாக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சுதா மேம் ரொம்ப நல்லா பிரசன்ட் பண்ணியிருக்காங்க.. இவ்வாறு தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார் அஷ்வின்.

    English summary
    You tuber Ashwin review about Soorarai Pottru movie. Ashwin says Sudha presents old Suriya in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X