For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவகார்த்திகேயனோட 10 வகுப்பு ஸ்டேட் போர்ட் தமிழ் பாடத்தின் மதிப்பெண் கேட்டால் ஆச்சர்யப்படுவீங்க

  |

  சென்னை: இந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது.

  டான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் சரியாக ஓடவில்லை.

  இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் மொழியில் தான் எவ்வளவு மதிப்பெண் எடுத்தேன் என்று கூறி இருக்கிறார்.

   சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் மிஷ்கின் அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிய போகிறாராம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் மிஷ்கின் அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிய போகிறாராம்

  அயலான்

  அயலான்

  24 ஏம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அயலான் திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாக்கியிருந்த அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான், நீரவ் ஷா போன்ற ஜாம்பவான்கள் தொழில்நுட்ப கலைஞர்களாக ஒப்பந்தமானார்கள். ஆனால் கோவிட் 19, பொருளாதாரப் பிரச்சனை போன்ற பல காரணங்களால் அதன் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போகிறது. சமீபத்தில், பிரின்ஸ் பட புரமோஷனில் அந்தப் படம் விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.

  மாவீரன்

  மாவீரன்

  யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் இயக்குநர் மடோன் அஷ்வின் மாவீரன் என்கிற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க ஒப்பந்தமானார். மிஷ்கின் அதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு எழுந்து படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. ஆனால் அந்தச் செய்தி வந்த அதே வேகத்தில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டதாக படக் குழுவினர் அறிவித்தனர்.

  தமிழ் பேசுவ...

  தமிழ் பேசுவ...

  தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பதற்கு தமிழ் மிகவும் முக்கியம். அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கோயம்பத்தூரை சேர்ந்த ஒரு சின்னத்திரை நடிகை,"நா நல்லா தமிழ் பேசுவேன்..." என்பதற்கு பதிலாக பேசுவ பேசுவ என்று தவறாக உச்சரிப்பார். அதனை சிவா சரியாகச் சொல்லிக் கொடுத்தாலும் தவறாகவே மீண்டும் உச்சரிப்பார். பூ புஷ்பம் நகைச்சுவை போல ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் ஓய்ந்து போய்விடுவார். பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும் அந்த நிகழ்ச்சி யூடியூப், டிக் டாக் என்று மிகப் பிரபலமானது.

  10-ஆம் வகுப்பு மதிப்பெண்

  10-ஆம் வகுப்பு மதிப்பெண்

  இந்நிலையில் பிரின்ஸ் படத்தில் வாத்தியாராக நடித்த சிவகார்த்திகேயனுக்கு எந்த பாடம் பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ் என்று பதிலளித்த சிவா, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்றதாகவும் அதற்கு காரணம், வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அம்மா படிக்கச் சொன்னால் உடனே தமிழ் புத்தகத்தை எடுத்து படிப்பேன். அக்கா கேள்வி கேட்டால் கூட எளிதில் பதிலளிப்பேன். அதனால் எப்போதும் தமிழ்தான் எனக்கு பிடித்த பாடம் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

  English summary
  Actor Sivakarthikeyan had two films released this year, Don and Prince. While Don was a huge success, Prince did not fare well with mixed reviews. In this case, Sivakarthikeyan has said in his recent interview how much he scored in his favorite Tamil Subject.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X