»   »  செம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

செம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் த்ருவ் சர்மா திடீர் என்று மரணம் அடைந்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் மகன் த்ருவ் சர்மா. காது கேளாத, வாய் பேச முடியாத அவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் அதிகம்.

அவர் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

த்ருவ்

த்ருவ்

கடந்த சனிக்கிழமை த்ருவ் திடீர் என்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் பல உறுப்புகள் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணம்

மரணம்

மருத்துவமனையில் இருந்த த்ருவ் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

சிசிஎல்

சிசிஎல்

திரையுலக பிரபலங்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் விளையாடியவர் த்ருவ்.

பாராட்டு

பாராட்டு

த்ருவ் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். தனது குறைகளை பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்த த்ருவ் ஃபிட்டாக இருந்தவர். இப்படி திடீர் என்று அவர் மரணம் அடைந்துள்ளது கன்னட திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Dhruv Sharma, who was known for his excellent cricketing skills in Celebrity Cricket League, and an actor by passion, is no more.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil