காதல் தோல்வி.. வாய்தா பட நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை: வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி வந்த பவுலின் திடீரென இப்படியொரு முடிவை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

காதல் தோல்வி காரணமாகத்தான் அவர் இப்படியொரு சோக முடிவை எடுத்துக் கொண்டார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

கபிலன் மகள்

கபிலன் மகள்

சமீபத்தில் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியது தான் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படது. தூரிகை தற்கொலை செய்துகொண்டு இறந்த கொஞ்ச நாட்களிலேயே இன்னொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இளம் நடிகை தற்கொலை

இளம் நடிகை தற்கொலை

29 வயதே ஆகும் தீபா என்கிற பவுலின் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். விருகம்பாக்கத்தில் தனியாக ஒரு பிளாட்டில் வசித்து வந்த அவர் திடீரென தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பவுலினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

காதல் தோல்வி

காதல் தோல்வி

இளம் துணை நடிகை தீபா என்கிற பவுலின் காதல் தோல்வியை சமீபத்தில் சந்தித்ததால் தான் இப்படியொரு விபரீத முடிவை மேற்கொண்டார் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. பவுலினின் தற்கொலை செய்தி அவரது குடும்பத்தினரையும் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்

துணை நடிகை பவுலின் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளார். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைத்திருந்த அவர், தீடிரென இப்படியொரு முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது என அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வாய்தா படத்தில்

வாய்தா படத்தில்

இயக்குநர் மஹிவர்மன் இயக்கத்தில் நாசர் உள்ளிட்டோர் நடித்த வாய்தா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பவுலின் ஜெஸிகா. அதற்கு முன்னதாக துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது மறைவை அறிந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X