»   »  நாகூர் பரோட்டா கடையில் ஒரு மாதம் வேலை பார்த்த ஹீரோ: காரணம் பாலா

நாகூர் பரோட்டா கடையில் ஒரு மாதம் வேலை பார்த்த ஹீரோ: காரணம் பாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலா படத்தில் நடிப்பதற்காக யுவன் ஒரு மாதம் பரோட்டா கடையில் வேலை செய்துள்ளார்.

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து நாச்சியார் படத்தை இயக்கி வருகிறார் பாலா. இந்த படத்தை அடுத்து அவர் சாட்டை நாயகன் யுவனை வைத்து ஒரு படம் எடுக்கிறார்.

அந்த படத்தில் யுவன் பரோட்டா கடையில் வேலை செய்கிறாராம்.

யுவன்

யுவன்

பாலா யுவனை அழைத்து தம்பி, என் படத்தில் நீ பரோட்டா கடையில் வேலை செய்கிற கதாபாத்திரம். அதனால் பரோட்டா போட கற்றுக் கொண்டு வா என்று கூறினாராம்.

பரோட்டா

பரோட்டா

பாலா சொல்லி யுவன் மறுப்பாரா என்ன. நாகூருக்கு சென்று அங்கு உள்ள பரோட்டா கடை ஒன்றில் ஒரு மாதம் வேலை செய்துள்ளார் யுவன். கடைக்கு வந்தவர்கள் பரோட்டா போடுவது ஒரு நடிகன் என்ற விஷயமே தெரியாமல் சாப்பிட்டு சென்றுள்ளனர்.

சூப்பர்

சூப்பர்

ஒரு மாதத்தில் யுவன் சூப்பராக பலவகை பரோட்டா போட கற்றுக் கொண்டுள்ளார். அடுத்து ஆயுதம் இல்லாமல் தாக்க சண்டை பயிற்சி எடுக்க உள்ளாராம்.

விளையாட்டு ஆரம்பம்

விளையாட்டு ஆரம்பம்

விஜய் ஆனந்த், சூரியன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள விளையாட்டு ஆரம்பம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் யுவன். அவருக்கு ஜோடியாக ஷ்ராவ்யா நடித்துள்ளார்.

English summary
Young actor Yuvan worked in a parota shop in Nagore for a month for his upcoming movie to be directed by Bala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil