twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல ஹாசன்...பெயரை வைத்தே ஓவியம்...உலக சாதனை படைத்த மாணவி

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் பல புதுமைகளை, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டவர் கமலஹாசன். உலக நாயகன் என ரசிகர்களாலும், திரையுலகினராலும் புகழப்படுபவர் கமல்.

    அப்படிப்பட்ட கமலின் ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த மாணவி நேஹா ஃபாத்திமா. கோடுகள், புள்ளிகள், வளைவுகள் என எதையும் பயன்படுத்தாமல் இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.

    பெயரை வைத்து ஓவியம்

    பெயரை வைத்து ஓவியம்

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் நேஹா ஃபாத்திமா. இவர், கமலின் மிகப் பெரிய stencil word art ஓவியத்தை உருவாக்கி உள்ளார். கமலஹாசன் என்ற வார்த்தையை மட்டும் வைத்து, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த ஓவியத்தை அவர் உருவாக்கி உள்ளார்.

    உலக சாதனைக்கு கமல் பாராட்டு

    உலக சாதனைக்கு கமல் பாராட்டு

    இந்த சாதனை அமெரிக்காவை சேர்ந்த சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கமல், அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பேர் சொல்லும் பிள்ளை என குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.

    பேர் சொல்லும் பிள்ளை

    பேர் சொல்லும் பிள்ளை

    கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். 'பேர் சொல்லும் பிள்ளை' என்பது இதுதானா! என குறிப்பிட்டுள்ளார்.

     படங்களிலும் கமல் பிஸி

    படங்களிலும் கமல் பிஸி

    கமலின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அரசியல் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அடுத்தடுத்து தனது புதிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல். விக்ரம், பாபநாசம் 2, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    English summary
    Neha Fatima has won an award for creating a world record by drawing the largest stencil word art image of Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X