»   »  கையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி

கையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைஞர்களே கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன். தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்கப்பா. பண்ணிட்டு நல்லா வாழுங்கப்பா என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

நடிகர் சிவக்குமாருக்கு 75 வயதாகிறது இதையொட்டி இன்று சென்னையில் அவர் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிவக்குமார். அப்போது அவர்களிடையே சிவக்குமார் பேசுகையில் உற்சாகத்துடன் காதல் குறித்துப் பேசினார்.

Youths should love and marry their lovers, says Sivakumar

சிவக்குமார் கூறியதிலிருந்து...

பல ஜோடிகளை சேர்ப்பதும் நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்), பிரிப்பதும் நீங்கள்தான் . என் பையனுக்குக் கூட நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க (சூர்யா -ஜோதிகாவைச் சொல்கிறார்). கெமிஸ்ட்ரி நல்லாருக்கு, ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குன்னு எழுதுனீங்க.

அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க. இன்னும் பத்து வருஷத்தில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் அரேன்ஜ்ட் மேரேஜே இருக்காது. எல்லாமே காதல் கல்யாணமாதான் இருக்கும்.

தாராளமா காதல் கல்யாணம் பண்ணிக்குங்க. பண்ணிட்டு 40-50 வருஷம் சேர்ந்து வாழுங்க. அப்போதுதான் அது காதலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சேர்ந்து வாழ்வதைப் பொறுத்தே காதலும் வெற்றி அடையும்.

உங்கள் மூலமாக அனைவரையும், இளைஞர்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து காதல் கல்யணம் பண்ணிக்கங்கப்பா. பண்ணிட்டு நல்லா இருங்கப்பா என்று கூறினார் சிவக்குமார்.


English summary
Veteran actor Sivakumar has asked the youths to go for love marriges. He said that in another 10 years, the arrange marriage pattern will be abolished becuase of the increase of love marriages.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil