twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே கான்செப்ட்டில் வெளியான படங்கள்.. இளம் யூட்யூபர் அஷ்வினின் அலசல்!

    |

    சென்னை: ஒரே கான்செப்ட்டில் மற்ற மொழிகளில் வெளியான படங்கள் குறித்து அலசியுள்ளார் இளம் யூட்யூபர் அஷ்வின்.

    சினிமாவை பொறுத்தவரை காதல், போட்டி, பழிக்கு பழி, கொள்ளை போன்ற கதைக்களத்தை உருவாக்கப்படுகின்றன.

    தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும்… ரஜினி பட நடிகை !தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும்… ரஜினி பட நடிகை !

    அந்த வகையில் ஒரே கான்செப்ட் மற்றும் ஒரே மாதிரியான சீன்களை வைத்து வெளியான படங்களை பட்டியலிட்டுள்ளார் இளம் சினிம விமர்சகரும் யூட்யூபருமான அஷ்வின்.

    ரேஸ் குர்ரம்

    ரேஸ் குர்ரம்

    அதன்படி தமிழில் கார்த்திக் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தை பற்றி பேசியுள்ள அஷ்வின், அந்தப் படத்தை இன்ஸ்பைரேஷனாக கொண்டு தெலுங்கில் உருவாக்கப்பட்ட ரேஸ் குர்ரம் படத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் அல்லு அர்ஜூன் மற்றும் ஷியாம் இணைந்து நடித்திருப்பார்கள். ஆரம்பத்தில் இருத்து எதிரும் புதிருமாக அண்ணன் தம்பி இருவரும் இறுதியில் எப்படி எதிரிகளை பந்தாடுகிறார்கள் என்பதை விளக்கியுள்ளார்.

    டிரைவ் படம்

    டிரைவ் படம்

    அடுத்தப்படியாக பாலிவுட்டில் வெளியான டிரைவ் படம். சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான இப்படத்தின் கதையும் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையும் ஒரே மாதிரியானது என தெளிவுப்படுத்தியுள்ளார். சுஷாந்தை ஏமாற்றும் அவரது டீமை போல துல்கர் சல்மானை ரித்து வர்மா ஏமாற்றுவது போல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமாக்கப்பட்டிருக்கும். சில காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கும்.

    ரேஸ் 3

    ரேஸ் 3

    அடுத்து ரேஸ் 3 படம். சல்மான் கான் நடிப்பில் வெளியான இப்படம் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் இன்ஸ்பைரேஷன் என்று விளக்கியுள்ளார். இருப்படத்திலும் ஒத்துப் போகும் காட்சிகளை அழகாக எடுத்து சொல்லியிருக்கிறார் அஷ்வின்.

    2 ஸ்டேட்ஸ்

    2 ஸ்டேட்ஸ்

    அடுத்தப்படியாக அலைப்பாயுதே படத்தை இன்ஸ்பைரேஷனாக கொண்டு வெளியான படம் குறித்து பேசியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான அலைப்பாயுதே படத்தின் காட்சிகளை ஒத்து பாலிவுட் படமான 2 ஸ்டேட்ஸ் படம் இருக்கும் என கூறியுள்ளார். 2 ஸ்டேட்ஸ் படத்தில் ஆலியா பட், அர்ஜூன் கபூர் ஆகியோர் நடித்திருப்பார்கள்.

    ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்

    ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்

    இதேபோல் காதல் தேசம் படம் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் படத்தின் கதையும் ஒரே மாதிரியான கான்செப்ட் என விளக்கியுள்ளார். ஒரு பெண்ணுக்காக இரண்டு நண்பர்கள் போட்டிப்போடும் கதையை மையமாக கொண்ட காதல் தேசம் படத்தை இன்ஸ்பைரேஷனாக கொண்டு ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அல்லு அர்ஜூனின் டிஜே

    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான டிஜே படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான விஜய்யின் போக்கிரி படத்தை ஒத்து இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இரு படத்திலும் இடம் பெற்ற ஒரே மாதிரியான காட்சிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் அஷ்வின்.

    English summary
    Youtuber Ashwin reviwes same concept movies in industry. He has listed same concept movies from kollywood, bollywood and tollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X