டிடிஎஃப் வாசனின் IPL.. டீசர் வந்துடுச்சு.. லிப் லாக்லாம் இருக்கு.. என்ன பட்டம் கொடுத்திருக்காங்க பாருங்க?
சென்னை: யூடியூபில் பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரை சுற்றி சர்ச்சைகளும் பிரச்னைகளும் தொடர்ந்து எழுந்தாலும் அவருக்கான மவுசு 2கே கிட்ஸ் மத்தியில் குறையவில்லை. முதலில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கமிட்டானார். சில காரணங்களால் படம் நடக்கவில்லை. இப்போது IPL என்ற படத்தில் நடித்திருக்கும் சூழலில் இப்போது அதன் டீசர் வெளியாகியிருக்கிறது.
யூடியூபில் வெகு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். ஏராளமான சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கும் இவர் விலையுயர்ந்த பைக்கில் இந்தியாவை சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த ரைடின்போது அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வது, சாகசம் செய்வது என இருப்பார். அவரது வீடியோக்களை பார்த்து தங்களுக்கும் அப்படி பைக் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடிக்கும் 2கே கிட்ஸ்களும் உண்டு.
தொடர்ந்து பிரச்னைகள்: வாசன் குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனவர். அதேசமயம் அதிக பிரச்னைகள், சர்ச்சைகளையும் சந்தித்தவர். கடந்த வருடத்தி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதிவேகமாக பைக்கை இயக்கி சாகசம் செய்ததில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மேலும் அந்த விவாகரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறைக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் வீரன்: அந்த சமயத்தில்தான் மஞ்சள் வீரன் என்ற படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கூட வெளியானது. ஆனால் சிறை, பிரச்னை என்று இருந்ததால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்து நடித்துவிடலாம் என்று இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கும், இயக்குநருக்கும் மோதலும் உருவாகிவிட்டது. இதன் காரணமாக படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை.
ஐபிஎல்: சூழல் இப்படி இருக்க அவர் இப்போது IPL (Indian Penel law) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை கருணாநிதி என்பவர் இயக்கியிருக்கிறார். கிஷோர், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எப்படியாவது இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுத்து திரைத்துறையில் பெரிய ரைடு வர வேண்டும் என்ற நோக்கத்தில் வாசன் இப்படத்தில் உழைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
வெளியான டீசர்: இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கையில் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியிருப்பதும், அவருக்கு கம்ஃபோர்ட் ஏரியாவாக இருக்கும் பைக் ரைடை மையப்படுத்தியும் உருவாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது. டீசரில் அவருக்கு ரேஸிங் ஸ்டார் என்று பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். முன்னதாக அண்மையில்தான் தனது உறவினர் பெண்ணை வாசன் திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











