twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்சார் 50 முறை கத்திரி போட்டும்… ஜிப்ஸி மக்களை சென்றடைந்தது.. ராஜு முருகன் மகிழ்ச்சி !

    |

    சென்னை : தணிக்கைக்குழு 50 காட்சிகளை நீக்கிய பிறகும் ஜிப்ஸி மக்களை சென்றடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜு முருகன் கூறினார்.

    Recommended Video

    மொத்தம் 50 சென்சார் cut | GYPSY AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

    தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கும் படம் தான் ஜிப்ஸி. இந்த படம் கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம் இருந்தும் தணிக்கைகுழுவுக்கும் படக்குழுவுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் படத்தின் வெளியீட்டை இழுத்தடித்து விட்டது

    ypsy movie has reached people

    தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ராஜு முருகன் தணிக்கைகுழுவால் 50 காட்சிகளை நீக்கிய போதும் என் படம் மக்களை சென்றடைந்து விட்டது. இதுவே முதலில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.

    பல அரசியல் விமர்சனங்களை சென்சாரில் முக்கியமாக ஏற்பதில்லை . ஏன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட பல அரசியல் வசனங்களும் அரசியல் கட்சிகள் பற்றிய காட்சிகளும் தைரியமாக தணிக்கை குழுவால் அனுமதிக்கப்படுகிறது ஆனால், தமிழக தணிக்கை குழு மிகவும் மோசமாக உள்ளது என்று ராஜுமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். தணிக்கை குழு எதிர்காலத்தில் சிந்தனையாளர்கள் கையில் இருக்கு வேண்டும் என்று கூறினார்.

    ypsy movie has reached people

    ஜிப்ஸி படம் ஒரு நாடோடியை பற்றிய கதை . ஜீவா இந்த படத்தின் ஜிப்ஸியாக வெகு இயல்பாக நடித்திருப்பார் அதற்கு காரணம். இயக்குனர் ராஜு முருகன் கதையின் உண்மை தன்மைக்காக இந்தியா முழுக்க இரண்டு மூன்று முறை சுற்றி வந்தாராம் .

    ypsy movie has reached people

    அப்படி சுற்றி வந்ததால் தான் இந்த கதையை உண்மை மிக்கதாக சிறப்பாக எடுக்க முடிந்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜிப்ஸி கதைக்காக ஒரு முறை வட இந்தியா செல்லும் போது நடிகர் நவாஷ்வுதின் சித்திக்கை சந்திக்க நேர்ந்ததாக ராஜு முருகன் கூறினார் .

    ypsy movie has reached people

    அப்போது அவர் பேசி கொண்டிருக்கும் போது அரசியல் செயல்பாடுகளிலும் தவறான அரசியலுக்கு எதிரான குரல்கள் தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக படியாக வருகிறது என்று நவாஷ்வுதின் கூறினார் என ராஜுமுருகன் குறிப்பிட்டிருந்தார் .

    English summary
    Raju Murugan said that ‘gypsy’ people are happy to reach out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X