»   »  ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் இசையமைப்பாளர்... வேற லெவல் ப்ரோ!

ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் இசையமைப்பாளர்... வேற லெவல் ப்ரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் ஆனவர் தற்போது நடிகராகவும் ஆகிவிட்டார். இப்போது ஒரு பாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறார் யுவன்.

'மெட்ரோ' படத்தில் அறிமுகமான சிரிஷ் அடுத்து நடிக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இப்படத்தின் ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். அனுபமா குமார், சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். பர்மா படத்தை இயக்கிய 'தரணிதரன்' இப்படத்தை இயக்குகிறார். அவரே வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

Yuvan dance in raja ranguski film

இந்தப் படத்தின் ப்ரொமோஷனுக்காக ஒரு பாடலுக்கு இசை அமைத்து தானே பாடியுள்ளார் யுவன். இந்தப் பாடலில் படத்தில் நடிக்காத ஒருவரை ஆட வைக்க முயற்சித்தார் இயக்குனர் தரணிதரன். இதற்காக நடன இயக்குனர்கள் சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

இறுதியில் பாட்டுக்கு இசை அமைத்து பாடியிருக்கும் யுவனை ஆட வைத்தால் என்ன என்று முடிவு செய்தார்கள். தனக்கு ஆட வராது என்று முதலில் மறுத்த யுவன் பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக முறையாக ஒத்திகையில் கலந்து கொண்டு நடத்தி பயிற்சி எடுத்துக் கொண்டு ஆடியுள்ளார். இந்தப் பாடலை தனியாக விழா நடத்தி வெளியிட தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத், 'வணக்கம் சென்னை', 'மாரி' உள்ளிட்ட படங்களில் பாடலுக்கு ஆடி இருக்கிறார். இப்போது யுவனும் இசையமைப்பில் மட்டுமல்லாது டான்ஸ் ஆடியும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார்.

English summary
Music director Yuvan Shankar Raja is currently going to the next stage. 'Raja Runguski' is the next movie to be followed by Sirish's debut in 'Metro'. Yuvan has sang a song and danced for the promotion of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X