»   »  வாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்!

வாவ் அசத்தல்... இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களும் ஒரே படத்தில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 'பேய்பசி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக யுவனின் உறவினர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நமீதா மற்றும் அம்ரிதா ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Yuvan joins with santhosh narayanan for peipasi movie

சமீபத்தில், வெளியிடப்பட்ட 'பேய்பசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஹாரர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். வேறு பாடல்களே இல்லை எனக் கூறப்படுகிறது.

வெகு விரைவில் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி துவங்கப்படுமாம். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இசையமைக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்கள் சேர்ந்திருப்பதால், இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

English summary
Yuvan Shankar Raja is producing the film 'peipasi'. Yuvan's relative Hari Krishnan Bhaskar is the hero of this film. Composer Santhosh Narayan joins with Yuvan Shankar Raja for this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X