2 மனைவிகள்... 2 மகன்கள்... இது வீட்டுக்குள் நடக்கும் ‘வாய்க்கா தகராறு’!

மயில்சாமியின் மகன் வாய்க்கா தகராறு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சென்னை : நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கும் படத்திற்கு "வாய்க்கா தகராறு" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் பி.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு "வாய்க்கா தகராறு" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார். நாயகிகளாக வர்ஷிகா நாயகா ,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்கள் தவிர பவர்ஸ்டார், சிங்கம்புலி, மனோபாலா, போண்டாமணி, கராத்தே ராஜா, சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மலையாள இயக்குநர்:

மலையாள இயக்குநர்:

இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் கே வெங்கிடி. இவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது, சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர்.

கமர்ஷியல் படம்:

கமர்ஷியல் படம்:

வாய்க்கா தகராறு படம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடி கூறுகையில், "என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் "யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை" படத்தில் நடித்த விஜய் ராஜ் இருவரையும் வைத்து நான் முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.

சகோதரர்களுக்குள் மோதல்:

சகோதரர்களுக்குள் மோதல்:

ஒரு ஆண் சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள். சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது தான் கதை.

கிராமியப் பாடல்கள்:

கிராமியப் பாடல்கள்:

படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. தூள் கிளப்பி இருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது" என்கிறார் இயக்குனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X