»   »  'அஜித் 58' படத்துக்கு இசை இவரா..? - கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்!

'அஜித் 58' படத்துக்கு இசை இவரா..? - கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவு உழைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்களும் 'விவேகம்' படத்தை அமோகமாக வரவேற்றனர்.

கலவையான விமர்சனங்களைப் பெற்று படத்தின் வசூல் மூலம் வெற்றியைத் தக்கவைத்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் 'சிறுத்தை' சிவா தான் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Yuvan music for Ajith 58

அஜித் - சிவா இணையும் இந்த 'தல 58' படத்திற்கு இளைஞர்களின் இசைக் காதலன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவர்களது கூட்டணி மட்டும் அமைந்தால் படம் அமோகமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

யுவன் இசையில் தீம் சாங் செம மாஸ்ஸாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மாஸ் விரும்பும் தல ரசிகர்களுக்கு யுவன் இசை கிடைத்தால் இன்னொரு 'மங்காத்தா' கொண்டாடி விடலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இதுபற்றிய எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால் அஜித், யுவன் ரசிகர்களைக் கையில் பிடிக்கமுடியாது என்பது மட்டும் நிஜம்.

English summary
Ajith fans are happy with this news, Yuvan Shankar Raja is composing music for Ajith and Siva's combo 'Thala 58'. Fans are ready to celebrate another 'Mankatha' if really got Yuvan's music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil