»   »  'சேதுபதி' இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதியோடு இணையும் ஹீரோயின்!

'சேதுபதி' இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதியோடு இணையும் ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சேதுபதியின் அடுத்த படம் அஞ்சலியுடன்!- வீடியோ

சென்னை : விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அருண் குமார் இயக்குகிறார்.

Yuvan music for Vijay sethupathi anjali film

'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் குமார். இந்த இரண்டு படங்களிலுமே விஜய் சேதுபதி தான் ஹீரோ. தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியைத்தான் இயக்குகிறார் அருண் குமார்.

'பண்ணையாரும் பத்மினியும்' படம் சரியாகப் போகாவிட்டாலும், 'சேதுபதி' படம் செம வரவேற்பு பெற்றது. ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்த ஆக்‌ஷன் ஹீரோவாக அசத்திய விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தின் மூலம் பெண் ரசிகைகளும் உருவாகினர்.

மே மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. மலேசியா, தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்த கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
'Sethupathi' director Arun Kumar is directing his next film with Vijay Sethupathi. Anjali will be played opposite to Vijay Sethupathi in this film. Yuvan Shankar Raja to compose music for this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X