சீனுராமசாமி இயக்கம்... யுவன் தயாரிப்பு... ஹீரோ விஜய் சேதுபதி... கலக்கல் கூட்டணியில் புதிய படம்!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Yuvan to produce Vijay Sethupathys next

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் சீனுராமசாமி, அமீர், ராம், நடிகர்கள் தனுஷ், சிம்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் சீனுராமசாமி, விஜய் சேதுபதி இயக்கத்தில் தான் இயக்க உள்ள அடுத்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க உள்ளதாகக் கூறினார்.

விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசியதாவது, "இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு தர்மதுரை படத்திலும், அடுத்து கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X