»   »  வெங்கட் பிரபுவுடன் 6, சூர்யாவுடன் 7, நயன்தாராவுடன் 8... யுவனின் ரகசியம்!

வெங்கட் பிரபுவுடன் 6, சூர்யாவுடன் 7, நயன்தாராவுடன் 8... யுவனின் ரகசியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தன்னுடைய புதிய படத்தில் 6,7,8 என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றாராம்.

யுவன்சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசாக திரையுலைக் கலக்கி வருகிறார்.

தமிழில் பல்வேறு படங்களில் இசையமைத்து பாடல்களை வெற்றிபெறச் செய்துள்ளார் இவர்.

100 ஆவது படம்:

100 ஆவது படம்:

மனதை மயக்கும் பாடல்களைத் தரும் யுவனுக்கு கார்த்தியின் நடிப்பில் வெளியான "பிரியாணி" 100 ஆவது படமாகும்.

கைவசம் உள்ள படங்கள்:

கைவசம் உள்ள படங்கள்:

மேலும், தற்போது சூர்யாவின் அஞ்சான், தரமணி, வை ராஜா வை, வானவராயன் வல்லவராயன் என்று பல படங்கள் இவர் கைவசம் உள்ளது.

678 ரகசியம்:

678 ரகசியம்:

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படமான "மாஸ்" படத்திற்கு இசையமைக்க உள்ளார் யுவன். இதில்தான் அந்த 678க்கான சூட்சுமம் உள்ளதாம்.

வெங்கட்பிரபுவுடன் ஆறு:

வெங்கட்பிரபுவுடன் ஆறு:

அதென்னா 6,7,8 சிறப்பம்சம் என்ற கேள்விக்கு அவரே பதிலையும் கூறியுள்ளார். சூர்யா - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படமானது யுவன் - வெங்கட் பிரபு ஜோடிக்கு 6 ஆவது படம்.

சூர்யாவுடன் 7 – நயனுடன் 8:

சூர்யாவுடன் 7 – நயனுடன் 8:

சூர்யாவுடன் யுவனுக்கு இது 7 ஆவது படமாகும். நயன்தாராவின் நடிப்பில் யுவன் இசையமைப்பது இது 8 ஆவது தடவையாம். இதைத்தான் 6,7,8 ரகசியம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

English summary
Yuvan sankar raja again join with Venkat prabhu, Surya, Nayanthara in the order of 6,7,8 in the film MASS.
Please Wait while comments are loading...