புதுப்பேட்டை 2 ரெடியாகுது போல? 8வது முறையாக கூட்டணி.. செல்வராகவன் – யுவனின் மாஸ் போட்டோ வைரல்!

சென்னை: 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி என செல்வராகவன் போட்ட மாஸ் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

செல்வராகவன் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான அனைத்து படங்களின் ஆல்பங்களும் ரசிகர்களை இன்னமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஹிட் காம்போ

ஹிட் காம்போ

காதல் கொண்டேன் படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பே துள்ளுவதோ இளமை படத்திலேயே இந்த ஹிட் காம்போ இணைந்து விட்டது. தொடர்ந்து தனது பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவைத் தான் இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார் செல்வராகவன். இவர்களது கூட்டணியில் வெளியான பல பாடல்கள் இன்னமும் திரை வானில் மேஜிக் செய்து வருகின்றன.

8வது முறை

8வது முறை

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி என இதுவரை 7 முறை இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இந்நிலையில், 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றப் போவதில் மிக்க மகிழ்ச்சி என யுவன் உடன் இருக்கும் மாஸ் போட்டோவை போட்டு வைரலாக்கி உள்ளார் செல்வராகவன்.

சந்தோஷத்தில் யுவன்

சந்தோஷத்தில் யுவன்

எனக்கும் அதே சந்தோஷம் தான் சார்.. சீக்கிரமே இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என செல்வராகவனின் ட்வீட்டை ரீட்விட் செய்து யுவன் சங்கர் ராஜா போட்டுள்ள ட்வீட்டை யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இசை ரசிகர்களுக்கு கூடிய விரைவில் இன்னொரு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.

தயாரிப்பாளர் யார்?

தயாரிப்பாளர் யார்?

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை செல்வராகவன் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என தயாரிப்பாளர் தாணு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு செல்வராகவன் லைக் போட்டுள்ளார். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷின் அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை 2வா?

புதுப்பேட்டை 2வா?

நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்து புதுப்பேட்டை 2ம் பாகத்தை எடுக்கப் போகிறேன் என கடந்த ஆண்டே இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ள அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், புதுப்பேட்டை 2 உருவாகப் போகிறது என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ரெக்கார்டு பிரேக் ரவுடி பேபி

ரெக்கார்டு பிரேக் ரவுடி பேபி

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் நடிப்பில் உருவான ரவுடி பேபி பாடல் யூடியூபில் 1 பில்லியன் வியூக்களை அள்ளி புதிய ரெக்கார்டை பிரேக் செய்துள்ளது. மீண்டும் தனுஷ் மற்றும் யுவன் கூட்டணியில் பாடல்கள் உருவாக உள்ள நிலையில், அடுத்த ரவுடி பேபியை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X