»   »  ஹேப்பி பர்த்டே... அவன் இவன் ... யுவனின் அட்டகாசமான "டாப்" பாடல்கள்!

ஹேப்பி பர்த்டே... அவன் இவன் ... யுவனின் அட்டகாசமான "டாப்" பாடல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா இசை குடும்பத்தின் வாரிசு. இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன், தனது 16-வது வயதில் அரவிந்தன் என்றபடத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இன்று வரை தனது 15 வருட திரையுல பயணத்தில், 100-க்கும் மேற்பட்ட படங்களில்பாடகராக, இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இன்று யுவன் பிறந்த நாள். இவரது பிறந்தநாளினை ஒட்டி இவர் பாடிய, இசையமைத்த என்றும் நாம் கேட்க கேட்க சலிக்காத பாடல்களை ரீவைன்ட் செய்து பார்க்கலாமா...

தீம் மியூசிக் :

தீம் மியூசிக் :

இவர் பாடல்களை பாடுவதில் மட்டுமில்லாமல், படங்களுக்கு இவர் இசையமைத்த தீம் மியூசிக்குகளும் ரசிகர்கள் மத்தியில் பல பாராட்டுகளையும், எதிர்பார்ப்புகளையும் பெற்றுள்ளது. அதில், 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், சண்டக்கோழி, புதுப்பேட்டை, பருத்திவீரன், சத்தம் போடாதே,பில்லா, பையா மற்றும் மங்காத்தா போன்ற படங்களின் தீம் மியூசிக் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

என் காதல் சொல்ல நேரமில்லை

2012-ல் பையா படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல். இன்றும் பல இளைஞர்கள் காதலை சொல்ல நேரமில்லாமல் பாடி கொண்டிருக்கின்றனர்.

கடல் ராசா நான்

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மரியான் படத்திற்கு யுவன் பாடிய பாடல்.

ஒரு கல் ஒரு கண்ணாடி

சிவா மனுசுல சக்தியில் யுவன் இசையமைத்து பாடிய பாடல்.

போகாதே

யுவன் தீபாவளி படத்திற்காக இசையமைத்த பாடல்.

யாரோடு யாரோ

யோகிக்கும், யாரோ குழந்தைக்கும் நடுவே இருக்கும் பாசத்தை எடுத்துக்காட்டும் பாடல்.

அய்யய்யோ

பருத்திவீரன் முத்தழகியின் காதலை அழகாக பாடலாக்கியுள்ளார் யுவன்.

முன்பனியா

நடிகர் சூர்யாவிற்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்த படம். படத்தின் வெற்றியில் இசைக்கும் பெரும் பங்கு உள்ளது.

ஆராரிராரோ

தாய்க்கு மகன் பாடும் தாலாட்டு.

ஆத்தாடி மனசுதான்

கழுகு படத்தில் யுவன் இசையமைத்த காதல் பாடல்.

மங்காத்தா

அஜீத்தின் 50-வது படமான மங்காத்தாவின் அதிரடி மாஸ் தீம் மியூசிக்.

English summary
Famous Music Director Yuvan Shankar Raja celebrates his birthday today. Here is a list of some of his famous songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil