»   »  யுவன் ஷங்கர் ராஜாவின் புதிய அவதாரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யுவன் ஷங்கர் ராஜாவின் புதிய அவதாரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாரிசுடன் நெருங்கி பழகும் டாப்சீ,யுவனின் புதிய அவதாரம்-வீடியோ

சென்னை : எந்த வகையான பாடல்கள் என்றாலும், பின்னணி இசை என்றாலும் செமையாக இசையமைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெறுபவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

இவரது இசையில் பாடல்கள் என்றாலே இளைஞர்களிடம் தனி வரவேற்பு பெறும். அவர் இசையமைத்து சமீபத்தில் வெளியான 'தரமணி' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

தற்போது யுவன் ஷங்கர் ராஜா, இசையமைப்பாளர் என்பதை அடுத்து விநியோகஸ்தர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். தனது KYIT ENTERTAINMENT பேனர் மூலம் ராணா டகுபதி நடித்திருக்கும் 'நான் ஆணையிட்டால்' படத்தை விநியோகம் செய்கிறார்.

Yuvan shankar raja's new avatar

யுவன் ஷங்கர் ராஜா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். யுவன் விநியோகிக்கும் 'நான் ஆணையிட்டால்' படம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

English summary
Yuvan Shankar Raja has made a new avatar. Yuvan distributes the film 'Naan Aanaiyittal' by KYIT ENTERTAINMENT.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil