twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவன் சங்கர் ராஜாவின் திடீர் தத்துவம்..வாழ்க்கையில் மன அமைதி, நிம்மதி தேவை..பணத்தை தேடி ஓடுகிறோம்

    |

    மனித இதயம் நன்றாக இருக்க வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் மிக முக்கியமான தேவை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

    தனியார் கல்லூரி விழாவில் கலந்துக்கொண்ட அவர் மனித இதயத்தை காப்பது, இளவயது மாரடைப்பை தடுப்பது பற்றி பேசினார்.

    தனியார் கல்லூரி நடத்தும் இளம் இதயங்களை காப்போம் என்ற திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு வாழ்க்கை தத்துவத்தை அழகாக சொன்னார் யுவன்.

    தனுஷின் 'நானே வருவேன்’ படத்தை ஏன் பார்க்கணும்? இந்த காரணத்திற்காக தான்!தனுஷின் 'நானே வருவேன்’ படத்தை ஏன் பார்க்கணும்? இந்த காரணத்திற்காக தான்!

    நடிகர் ரஜினிகாந்த் சொன்ன தத்துவம்

    நடிகர் ரஜினிகாந்த் சொன்ன தத்துவம்

    70 வயதிலும் மிக சுறுசுறுப்பாக இயங்கும் நடிகர் ரஜினிகாந்த இன்றும் நம்பர் ஒன் வசூல் சக்ரவர்த்தி. விழுந்தா தடுமாற யானை இல்லை, குதிரை சும்மா டக்குன்னு எழுந்துடணும் என்று சொன்ன ரஜினிகாந்த் ஒரு ஓடுகிற குதிரை என்பதால் தயாரிப்பாளர்கள் அவர் கால்ஷீட்டுக்காக இன்றும் காத்து கிடக்கின்றனர். அவர் இத்தனை இருந்தும் வெளிப்படையாக, எளிய வாழ்க்கையே வாழ்கிறார். அதற்கு அவர் ஆன்மிக பற்று ஒருபுறம் என்றாலும், வாழ்க்கையில் பிரச்சினைகளை அவர் பார்க்கும் விதம் மறுபுறம் என்று சொல்லலாம். ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த் சொன்ன வாக்கியம், வாழ்க்கையில் நிம்மதி வெளியில் இல்லை, அது உங்கள் உள்ளத்தில் தான் உள்ளது. ஒரு பிரச்சினையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கு என்றார். இதைவிட மன நிம்மதி பற்றி சுருக்கமாக சொல்ல முடியாது.

    இளவயது மாரடைப்புகள், மரணங்கள்

    இளவயது மாரடைப்புகள், மரணங்கள்

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இளம் வயதில் மாரடைப்பு சில நேரம் மரணம் போன்றவை நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் முதல் பல முன்னணி திரைத்துறையினர்கூட மாரடைப்பால் உயிரிழந்ததை கண்டோம். இதற்கு போஸ்ட் கொரோனா சிம்டம்ஸ், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் என பல காரணங்களை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், உணவு நிபுணர்கள் கூறினாலும் அதையும் தாண்டி மன அமைதி முக்கியமானது என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. மன நலன் உடல் நலன் சம்பந்தப்பட்டது. நவீன வேகாமான வாழ்க்கை முறையினால் முதலில் வருவது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம். அது உடலில் அல்சர், சுகர், இதய பலகீனம் உள்ளிட்டவைகளுக்கு வழி வகுக்கிறது.

    வாழ்க்கை தத்துவம் சொன்ன யுவன்

    வாழ்க்கை தத்துவம் சொன்ன யுவன்

    இதை மையமாக வைத்து இளைஞர்கள் தங்கள் இதயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குறும்பட விழாவை சென்னை நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் விழா நடத்துகின்றனர். இதற்கான விழா நேற்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ, ஒளிப்பதிவாளர் ஓம்.பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய யுவன் சங்கர் ராஜா வாழ்க்கையின் தத்துவத்தை எளிதாக சொன்னார்.

    வீடு, பணம், சொத்தை தேடி ஓடி இறுதியில் நிம்மதியை இழக்கிறோம்-யுவன்

    வீடு, பணம், சொத்தை தேடி ஓடி இறுதியில் நிம்மதியை இழக்கிறோம்-யுவன்

    விழாவில் பேசிய யுவன் சங்கர் ராஜா "ஒரு இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை. ஆனால் பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம். எனவே, இதயத்தை பாதுகாக்க அமைதியும், நிம்மதியும் தேவை. இதை முன்வைத்து இந்த குறும்பட விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கிற அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார். அந்த விழாவில் போட்டியாளர்களுடன் இணைந்து தன் இசையில் உருவான ஒரு பாடலை பாடி அனைவரையும் மகிழ்ச்ச்சியில் ஆழ்த்தினார் யுவன் சங்கர் ராஜா.

    English summary
    Music composer Yuvan Shankar Raja has said that peace and tranquillity are the most important need in life for the human heart to be healthy. Participating in a private college function, he spoke about protecting the human heart and preventing heart attacks in young people. Yuvan spoke beautifully about his life philosophy while participating in the film festival 'Save Young Hearts' organized by a private college.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X