Just In
- 14 min ago
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
- 1 hr ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 1 hr ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
- 14 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
Don't Miss!
- Sports
கண்ணுல திமிரு.. விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற "சே" புஜாரா.. தரம்!
- News
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் வி. சாந்தா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட.. இது புதுசா இருக்கே! இவரு மியூஸிக்ல அவரு பாடியிருக்காரு.. 17 வருடத்துக்கு பிறகு இணைந்த பிரபலம்!
சென்னை: மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் திரைத்துறையினர், ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிங்கிள் ட்ராக்
இந்நிலையில் காலை முதலே மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த விஷயம் ஊரே அறிந்ததுதான். அவரை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் மூன்று பாடல்களை பாடியிருக்கிறார். அதில் வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய இரண்டு பாடல்களின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.

பொலக்கட்டும் பற பற..
இந்நிலையில் இன்று வெளியான ட்ராக் லிஸ்ட் மூலம் பிரபலமான இரண்டு இசையமைப்பாளர்கள் மாஸ்டர் படத்தில் பாடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் மாஸ்டர் படத்தில் பாடியிருக்கின்றனர். பொலக்கட்டும் பற பற என்ற பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

17 வருடங்களுக்கு பிறகு
அவரை தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலை பாடியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இதுவரை விஜயின் ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு தற்போது தான் விஜய் படத்துடன் இணைந்திருக்கிறார்.சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் மாஸ்டர் படத்தின் மூலம் விஜயுடன் இணைந்திருக்கிறார்.

முதல் முறையாக..
தன்னுடைய இசையில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அதேபோல் இளையராஜா, கார்த்திக் ராஜா இசையிலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ், தரன், தமன் ஆகியோரின் இசையில் ஏற்கனவே பாடியிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா அனிருத் இசையில் விஜய்க்காக முதல் முறையாக பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.