நானே வருவேன் பின்னணி இசையில் பிஸியான ஜூனியர் மேஸ்ட்ரோ: அப்டேட் கொடுத்த செல்வராகவன்

சென்னை: திருச்சிறம்பலம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' விரைவில் வெளியாகிறது.

செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

'நானே வருவேன்' படத்தின் பின்னணி இசை குறித்து இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார்.

மீண்டும் இணைந்த ப்ரதர்ஸ் கூட்டணி

மீண்டும் இணைந்த ப்ரதர்ஸ் கூட்டணி

காதல் கொண்டேன், புதுப்பேட்டை என தரமான சம்பவங்களை செய்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி, கடைசியாக ‘மயக்கம் என்ன' படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ள இந்த ப்ரதர்ஸ் கூட்டணியில், ‘நானே வருவேன்' படம் உருவாகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம், புதுமையான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர்

நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர்

'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள தனுஷ், ‘நானே வருவேன்' ரிலீஸை எதிர்பார்த்துள்ளார். தனுஷ் மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணியை திரும்பவும் பார்க்க வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். முக்கியமாக இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளது செம்ம எனர்ஜியைக் கொடுத்துள்ளது. மேலும், சில நாட்கள் முன்னர் நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியது. அதேபோல், இந்தப் படத்தின் டீசர் நாளை (செப்.15) வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

சிம்பு பட ரிலீஸ் தேதியில் டீசர் வெளியீடு

சிம்பு பட ரிலீஸ் தேதியில் டீசர் வெளியீடு

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நாளை (செப்.15) வெளியாகும் நிலையில், அதே தினத்தில் தனுஷின் நானே வருவேன் டீசர் ரிலீஸாவது ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பக்கா ஆக்சன் ஜானரில் மிரட்டலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. டீசரைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி இசையில் பிஸியான ஜூனியர் மேஸ்ட்ரோ

பின்னணி இசையில் பிஸியான ஜூனியர் மேஸ்ட்ரோ

'நானே வருவேன்' டீசர் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைப்பதில் ஜூனியர் மேஸ்ட்ரோ யுவன் பிஸியாகிவிட்டார். அவர் பின்னணி இசையமைப்பதில் பிஸியாக இருப்பதை செல்ஃபியாக எடுத்துள்ள செல்வராகவன், மேஸ்ட்ரோவுடன் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற கேப்ஷனுடன் அவரது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை தனுஷ், யுவன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X