Don't Miss!
- News
2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரஜினி கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்... யுவன் கேரியரில் இது எதிர்பாராத அதிசயம்...?
சென்னை:
சூப்பர்
ஸ்டார்
ரஜினி
நடித்து
வரும்
ஜெயிலர்
திரைப்படம்
தமிழ்ப்
புத்தாண்டு
ஸ்பெஷலாக
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்
தொடர்ந்து
தனது
மகள்
ஐஸ்வர்யா
இயக்கும்
லால்
சலாம்
படத்தில்
நடிக்கவுள்ளார்
ரஜினி.
இந்நிலையில்,
ரஜினியின்
171வது
படத்தை
பிரதீப்
ரங்கநாதன்
இயக்கவுள்ளதாக
தகவல்
வெளியாகியிருந்தது.
ரஜினி
எடுத்த
அதிரடி
முடிவு...
தன்னையே
கலாய்த்த
இயக்குநருக்கு
தலைவர்
171
படத்தில்
வாய்ப்பு?

ரஜினியின் ஜெயிலர், லால் சலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் சூட்டிங் முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும், ரஜினியுன் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் கேரக்டர்களில் நடிக்கின்றனர். லால் சலாம் படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் புதிய கூட்டணி
ஜெயிலர் படத்திற்குப் பிறகு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் கமிட் ஆகியிருந்தார் ரஜினி. அதில் ரஜினியின் 170வது படம் லால் சலாம் என்ற நிலையில், அடுத்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. தலைவர் 171 என்ற அந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கலாம் என சொல்லப்பட்டது. சிபி சக்கரவர்த்தியும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார். ஆனால், சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை என்பதால் அவருக்குப் பதிலாக பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த வாய்ப்பு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 171 விரைவில் அறிவிப்பு?
முதல் படமான கோமாளி மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட அடித்தது. மேலும் ஓடிடியில் வெளியான பின்னரும் கூட திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்து பாராட்டியிருந்தார் ர்ஜினி. அப்போது அவர் கோமாளி படத்தில் தன்னை கலாய்த்து ஒரு சீன் வைத்ததையும் பிரதீப் ரங்கநாதனிடம் ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ரஜினிக்கு பிரதீப் ஒரு ஒன்லைன் சொல்லியிருந்ததாகவும், அது அவருக்குப் பிடித்துவிட்டதாகவும் தெரிகிறது.

ரஜினி கொடுக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்
இதனையடுத்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனிடம் கதை சொல்வதற்காக லண்டன் சென்றுள்ளாராம் பிரதீப். ரஜினியும் பிரதீப் படம் விஷயம் தொடர்பாக சுபாஸ்கரனிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கூட்டணி அமைவது உறுதி என்றும், சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. இந்த நிலையில், தான் லவ் டுவே படத்திற்கு இசையமைத்த யுவன், ரஜினி - பிரதீப் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜா, தேவாவுக்குப் பிறகு ஏஆர் ரஹ்மான், அனிருத், சந்தோஷ் நாரயணன் பக்கம் சென்ற ரஜினி, முதன்முறையாக யுவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம். இது யுவனின் கேரியரில் மிகப் பெரிய அதிசயமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.