»   »  சிம்பு இசையில் யுவன் பாடும் 'காதல் தேவதை...' - சந்தானம் பாடல் ப்ரொமோ

சிம்பு இசையில் யுவன் பாடும் 'காதல் தேவதை...' - சந்தானம் பாடல் ப்ரொமோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இன்னொரு பாடலை இசையமைப்பாளர் யுவன் பாடியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சேதுராமன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்க போடு போடு ராஜா.' இந்தப் படத்தில் நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

yuvan in simbu music in sakka podu podu raja movie

இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது யுவன் பாடியிருக்கும் 'காதல் தேவதை' பாட்டின் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகத் திரையுலகில் தலை காட்டாமல் இருந்த சிம்பு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் ஹீரோ சந்தானம் மீது தற்போது ஒரு பில்டரை தாக்கிய வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Santhanam is the hero of the film 'Sakka Podu Podu Raja'. Simbu is the music composer of this film. Music composer yuvan shankar raja has sung 'kadhal devathai' song in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil