»   »  குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன்!

குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குரங்கு பொம்மை என்ற படத்தின் இசை பிடித்துப் போனதால், அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார்.


Yuvan snaps Kurangu Bommai audio rights

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.


இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது 'யு 1 ரெக்கார்ட்ஸ்' மூலம் பெற்றுள்ளார்.


யுவன் இசை உரிமையை பெற்றது 'குரங்கு பொம்மை' படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.

English summary
Music director Yuvan Shankar Raja has acquired the audio rights of Kurangu Bommai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil