»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திருமணம் மார்ச் 20ம் தேதிசென்னையில் நடக்கிறது.

இசைஞானியின் முதல் மகனான கார்த்திக்ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. அடுத்தவரான பவதாரணி,பின்னணிப்பாடகியாக விளங்குகிறார். கடைசிப் புதல்வரான யுவன் ஷங்கர் ராஜாவும் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிநடை போட்டு வருகிறார்.

அரவிந்தன் படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான மன்மதன் வரை யுவனின் இசைக் கொடி உயரப் பறந்து வருகிறது.

யுவனுக்கும், லண்டனைச் சேர்ந்த வேலாயுதம் சந்திரன் என்பவரின் மகள் சுஜாதாவிற்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இது காதல்திருமணமாகும்.

யுவன்-சுஜாதா திருமணம் மார்ச் 20ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில்நடக்கிறது. அதற்கு முந்தைய நாள் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்தப்படவுள்ளது.

திருமணத்தன்று மாலை திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளை இளையராஜா, அவரதுமனைவி, சகோதரர் கங்கை அமரன் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil