»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பிரபல சினிமா இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜாவின் திருமணம் நாளை சென்னையில்நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த லண்டனைச் சேர்ந்த சுஜயா என்ற பெண்ணை இவர் மணக்கிறார்.

மன்மதன், 7 ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன்,ராம் உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர்ராஜா. இவரது இசையில் பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி விடுவதால் தற்போது இவரதுபாடல்களுக்குத் தான் மவுசு அதிகம்.

யுவன் சங்கர் ராஜா, லண்டனைச் சேர்ந்த சுஜயா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக ரகசியமாக காதலித்து வந்தார். அடிக்கடிபோன், இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்துவந்த இவர்கள் இருவரும் இப்போது திருமணம் செய்து கொள்ளமுடிவெடுத்துள்ளனர்.

இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு உடனேயே ஓகே சொல்லிவிட்டனர். இதனால் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம்நடைபெற்றது.

இவர்களது திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் மண்டபத்தில் நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.திருமணத்தையொட்டி மாண்டலின் சீனிவாசனின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

நாளை இரவு 7 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது ஹரிகரன் குழுவினரின் கஜல் இசை நிகழ்ச்சிநடைபெறகிறது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இளையராஜாவும். அவரது குடும்பத்தினரும் செய்து வருகின்றனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil