Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அம்மா அருகில் இல்லாதபோது.. தோள் கொடுத்து ஆறுதல் சொல்லும் உறவு.. அர்ச்சனா மகளின் உருக்கமான பதிவு!
சென்னை பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஸாரா ஷேர் செய்துள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஹன்சிகாவின்
அடுத்த
திரைப்படத்தின்
போஸ்டர்
வெளியானது...
ஒரே
ஷாட்டில்
உருவாகிறது!
இதில் குழுவாக விளையாடியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதோடு ஆரியையும் டார்கெட் செய்ததால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

மூளையில் அறுவை சிகிச்சை
தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அர்ச்சனா. இந்நிலையில் கடந்த வாரம் மூளையின் பக்கவாட்டில் திரவ கசிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி ஆகியிருப்பதாக கூறினார்.

அர்ச்சனாவின் மகள் ஸாரா
மேலும் மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். தான் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்றும் தன்னுடைய உடல் நிலை குறித்த அப்டேட்டுகளை தனது மகள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார்.

ஒரு மாதம் ஆகும்
அதைப்போலவே அர்ச்சனாவுக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது என்றும் அவர் நலமுடன் உள்ளார் என்றும் கூறியிருந்தார். இதனிடையே அர்ச்சனா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு மாதம் ஆகும் என்றும் தகவல் வெளியானது.

அம்மா போன்று ஒருவர்
இந்நிலையில் அர்ச்சனாவின் மகளான ஸாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். பிக்பாஸ் பிரபலமான சோம் சேகரின் தோளில் சாய்ந்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள ஸாரா, சில நேரங்களில் உங்கள் அம்மா டவுனாக இருக்கும்போது, நீங்கள் எப்போதும் ஓய்வெடுக்க ஒரு தாயை போன்ற தோள் வேண்டும்,

என்னால் கேட்க முடிகிறது
எல்லாம் சரியாகிவிடும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும் என்று கூறவேண்டும்! அவர் அதைச் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னால் அதை கேட்க முடிகிறது.. அம்மா சொல்வதைப் போல - "சத்தமாகவும் தெளிவாகவும், உலகம் அதைக் கேட்க முடியும் என்பதை போல" என பதிவிட்டுள்ளார்.

நெகிழ்ந்த சோம்
ஸாராவின் இந்த பதிவை பார்த்த சோம் சேகர், ஸாரா பேபி உனக்கு தெரிந்ததை விடவும் நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன். கவுடள் ஆசிர்வதிக்கட்டும் லிட்டில் ஒன்.. என நெகிழ்ந்து போய் பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவையும் பார்த்த ரசிகர்கள் அழகான உறவு என தெரிவித்துள்ளனர்.

அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்
மேலும் சிலர் அச்சும்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் நீங்களும் பத்திரமாக இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். ஸாராவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. லைக்ஸையும் குவித்து வருகிறது.