»   »  சினிமாவில் நடிப்புத் திறன் அல்ல அழகு தான் முக்கியம்: உண்மையை சொல்லும் நடிகை

சினிமாவில் நடிப்புத் திறன் அல்ல அழகு தான் முக்கியம்: உண்மையை சொல்லும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பார்க்க அழகாக இருக்கும் வரை நடிப்பு திறன் முக்கியம் இல்லை என்று திரையுலகில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கானின் வீர் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ஜரீன் கான். குச்சி குச்சியாக ஹீரோயின்கள் இருக்கும் பாலிவுட்டில் ஜரீன் கான் பூசினாற் போன்று உள்ளார்.

இந்த காரணத்தால் பலர் அவரை கிண்டல் செய்வதும் உண்டு.

சினிமா

சினிமா

நான் திருப்தியுடன் பணியாற்றி வருகிறேன். நான் நடிக்க வந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. என் சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னை பாதிக்கவில்லை என்கிறார் ஜரீன்.

 சவால்

சவால்

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்த நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு தான் சரிப்பட்டு வருவார் என்று முடிவு செய்யும் பழக்கம் திரையுலகில் உள்ளது. ஆனால் அது என் விஷயத்தில் உண்மை இல்லாதது மகிழ்ச்சி என ஜரீன் தெரிவித்துள்ளார்.

அழகு

அழகு

பார்க்க அழகாக இருக்கும் வரை நடிப்பு திறன் முக்கியம் இல்லை என்று திரையுலகில் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது என்கிறார் ஜரீன் கான்.

 கதாபாத்திரங்கள்

கதாபாத்திரங்கள்

ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் அளவுக்கு நான் இன்னும் வரவில்லை. அது நடந்தால் சவாலாக இருக்கும் ஆனால் அதே சமயம் சந்தோஷமாகவும் இருக்கும் என ஜரீன் கூறியுள்ளார்.

English summary
Bollywood actress Zareen Khan has opened up harsh secrets about the film industry by saying that if an actor is physically appealing then it doesn't matter if they're talented or not.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil