»   »  குடிச்சுட்டு கூத்தடிக்கிறீங்க: விளம்பர நிகழ்ச்சியில் இருந்து கோபமாக கிளம்பிய நடிகை

குடிச்சுட்டு கூத்தடிக்கிறீங்க: விளம்பர நிகழ்ச்சியில் இருந்து கோபமாக கிளம்பிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஜரீன் கான் தனது அக்சர் 2 படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் நாராயண் மகாதவேன் இயக்கத்தில் ஜரீன் கான், கவுதம் ரோட் உள்ளிட்டோர் நடித்துள்ள பாலிவுட் படம் அக்சர் 2. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஜரீன் கானுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜரீன் கான் கூறியிருப்பதாவது,

முத்தம்

முத்தம்

அக்சர் 2 கவர்ச்சிப் படம் இல்லை என்று கூறிவிட்டு படம் முழுக்க எனக்கு அரைகுறை ஆடை அளித்தார்கள். முத்தக் காட்சிகளின் நேரத்தையும் அதிகரித்தனர். என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

ஸ்பான்சர்களிடம் ஓவராக வாக்குறுதி அளித்துவிட்டு என்னிடம் எதுவுமே கூறவில்லை. அங்கு சென்றால் படக்குழுவினர் சாப்பிட்டுக் கொண்டும், பீர் குடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஒரு பெண்ணிடம் இப்படி தான் நடந்து கொள்வதா?

சாவி

சாவி

குடித்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசி பலனில்லை என்று கிளம்பினால் கார் சாவியை பறித்துக் கொண்டனர். பின் பாடிகார்டின் காரில் கிளம்பிச் சென்றேன்.

தொல்லை

தொல்லை

எனக்கு போதிய பாதுகாப்பு இல்லை. சாலையில் கூட்டம் கூடியிருந்தது. கொஞ்சம் விட்டிருந்தால் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக தப்பித்தேன் என்றார் ஜரீன் கான்.

English summary
Bollywood actress Zareen Khan walked out of Aksar 2 promotions after having a tiff with the makers of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil