»   »  சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிமுருகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் டிவி கைப்பற்றியிருக்கிறது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் ரஜினிமுருகன்.


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான இப்படம் வசூலை வாரிக்குவித்தது.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

லிங்குசாமியின் தொடர் கடன் பிரச்சினைகளால் கடந்த வருடம் வெளியாக வேண்டிய இப்படம், ஒருவழியாக இந்த பொங்கலுக்கு வெளியானது. லேட்டாக வந்தாலும் கூட, ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த வருடத்தின் முதல் வெற்றிப்படமாகவும் ரஜினிமுருகன் அமைந்தது.


கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் வெற்றிப்படமாக மாறியது. விளைவாக தற்போது விஜய் 60 மற்றும் தொடரி போன்ற படங்களில் விஜய், தனுஷுடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் கீர்த்திக்கு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது அடுத்த படங்களில் கீர்த்தியை ஒப்பந்தம் செய்ய போட்டிபோட்டு வருகின்றனர். கீர்த்தியின் இந்த பெயர், புகழுக்கு ரஜினிமுருகன் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.


ஜீ தமிழ்

ஜீ தமிழ்

ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற டிவி சேனல்களுக்குள் பெரும்போட்டியே நடக்கும். அந்த வகையில் போட்டியில் வெற்றிபெற்று இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது. மிக அதிக விலை கொடுத்து ரஜினிமுருகன் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


ஏப்ரல் 10

ஏப்ரல் 10

ஆனால் பண்டிகை தினங்களில் இப்படத்தை ஒளிபரப்பாமல், ஏப்ரல் 10 ல் இப்படத்தை ஜீ தமிழ் ஒளிபரப்புகிறது. தற்போது இதற்கான விளம்பரத்தை ஜீ டிவியில் அடிக்கடி காண முடிகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஜீ தமிழ் தற்போது ரஜினிமுருகன் படத்தையும் கைப்பற்றியுள்ளது.


நம்பி பாருங்க...English summary
Zee Tamil Acquired Rajinimurugan Satellite Rights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil