Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 12 அமைச்சர்கள் -19 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட டீமை களமிறக்கிய திமுக!
- Finance
Budget 2023: வங்கிகளுக்கு மூலதனம் ஒதுக்கீடு இருக்க வாய்ப்பில்லையாம்..அப்படின்னா கடன்?
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
தேவயானியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஆர்ஜே பாலாஜி.. எதுக்காக தெரியுமா?
சென்னை : நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீட்ல விஷேசம். படத்தில் அபர்ணா பாலமுரளி ஜோடி சேர்ந்துள்ளார்.
Recommended Video
படத்தில் ஊர்வசி, சத்யராஜும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜியின் பெற்றோராக இவர்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தை பிரமோட் செய்ய ஆர்ஜே பாலாஜி புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
“வீட்ல
விசேஷங்க“..
ஆர்ஜே
பாலாஜி
சொன்ன
குட்
நியூஸ்..
குஷியில்
ரசிகர்கள்
!

வீட்ல விஷேசம் படம்
ஆர்ஜே பாலாஜியின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகவுள்ளது வீட்ல விஷேசம். பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்ற பதாய் ஹோ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. என்ஜே சரவணன் என்பவருடன் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

17ம் தேதி ரிலீஸ்
படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்களும் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 17ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தின்மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளார் ஆர்ஜே பாலாஜி.

அம்மாவாக ஊர்வசி
மூக்குத்தி அம்மன் படத்திலும் ஊர்வசி ஆர்ஜே பாலாஜியின் அம்மாவாக பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்ஜே பாலாஜியின் அம்மாவாக நடித்துள்ளார் ஊர்வசி. அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.

சிறப்பான பிரமோஷன்
படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் கடந்த சில தினங்களாக படக்குழு ஈடுபட்டுள்ளது. விஜய் டிவியின் நிகழ்ச்சிகள், பேட்டிகள் என ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட டீம் சிறப்பாக ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது இதுவரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியிலும் ஆர்ஜே பாலாஜி ஈடுபட்டுள்ளார்.

தேவயானியுடன் இணைந்த ஆர்ஜே பாலாஜி
ஜீ தமிழில் சிறப்பான தொடர்களில் ஒன்றான புதுப்புது அர்த்தங்கள் தொடரில் வீட்ல விஷேசம் டீம் சங்கமமாக நடித்துள்ளது. எப்போதும் இரண்டு சீரியல்கள் சங்கமிக்கும் எபிசோட்களை ரசிகர்கள் பார்த்துவரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக சீரியலுடன் சங்கமிக்கும் புதிய முயற்சியை தற்போது ஆர்ஜே பாலாஜி மேற்கொண்டுள்ளார்.

ஆர்ஜே பாலாஜி அதிருப்தி
புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயானியை அபர்ணா பாலமுரளியுடன் சந்திக்கும் ஆர்ஜே பாலாஜி, தன்னுடைய தாய் ஊர்வசி வயதான காலத்தில் கர்ப்பமாக உள்ளதை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். அப்போது தேவயானி, தன்னுடைய குழந்தையை கொஞ்சுகிறார்.

பொங்கியெழுந்த தேவயானி
இதையடுத்து அவரும் வயதான காலத்தில் குழந்தை பெற்றவரா என்று கேள்வி எழுப்புகிறார். இதை கேட்டு பொங்குகிறார் தேவயானி. தங்களுக்கு என்று எந்த விருப்பமும் இருக்கக் கூடாதா என்று கேட்கிறார். இதையடுத்து பதில் சொல்ல முடியாமல் ஆர்ஜே பாலாஜி முழிக்கிறார். இவ்வாறு ஜீ தமிழ் புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது.

சிறப்பான ட்ரெயிலர்
இதன் எபிசோட்கள் வரும் நாட்களில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து சிறப்பான வகையில் பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களை இந்த புதிய முயற்சி கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வயதான காலத்தில் ஊர்வசி கர்ப்பமாக காணப்படும் ட்ரெயிலரை பார்த்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.