நடுத்தெருவிற்கு வந்த சாமுண்டீஸ்வரி.. ஆதாரத்துடன் சிக்கிய சந்திரகலா.. கார்த்திகை தீபம்!

சென்னை: சிவனாண்டி சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்து, வீட்டை எழுதிக் கொடுத்துட்டா, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதையடுத்து ஊர் மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர். சாமுண்டீஸ்வரி எதுக்கு சிவனாண்டிக்கு வீட்டை எழுதி கொடுக்க வேண்டும் என சொல்ல, அவள் தான் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு இருக்கா என்று சொல்கிறான். ஆனால், சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதி கொடுக்கவில்லை என்று சொல்கிறாள். பின், மாப்பிள்ளை நாம போலீஸ் ஸ்டெஷனுக்கு போகலாம் என்று முடிவெடுக்க கார்த்திக் போலீஸ்க்கு எல்லாம் போக வேண்டாம். அப்புறம் கோர்ட்டுக்கு போக வேண்டியது இருக்கும் வீட்டுக்கு சீல் வைப்பாங்க, 24 மணி நேரத்தில் உண்மை என்ன என்பதை நானே கண்டுபிடித்து நிரூபிக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

சிவனாண்டி சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிய விஷயத்தில் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்கிய கார்த்திக், சாமுண்டீஸ்வரியிடம் எந்த ஆசிரமத்திற்காக இல்லத்தை எழுதி கேட்டதாக சொன்னார்களோ, அந்த ஆசிரமத்திற்கு சென்று விசாரிக்க அவர்கள் நாங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று சொல்கின்றனர். இதனால் வந்தவர்கள் போலியான நபர்கள் என தெரியவருகிறது. இந்த விஷயத்தை, கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் சொல்கிறான். இது எல்லாம் அந்த சிவனாண்டியின் வேலை அவன் தான் வேண்டும் என்றே ஆட்களை அனுப்பி இப்படி செய்து இருக்கிறான் என சொல்கிறார். அப்போது, சாமுண்டீஸ்வரி, இல்ல மாப்பிள்ளை நான் பத்திரத்தை நன்றாக படித்து பார்த்துவிட்டுத்தான் கையெழுத்து போட்டேன் என்கிறாள். உடனே, கார்த்திக், எழுதியது, ஒரு மணிநேரத்தில் அழிந்து போவது போல நிறைய போனங்கள் வந்துவிட்டது. அத்தை, அப்படித்தான் ஏதோ தில்லு முல்லு செய்து எழுதி வாங்கி இருப்பார்கள் என்று சொல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் ரேவதி, பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் என் மருமகள் பாவம், அவளை இந்த சிவனாண்டி நிம்மதியாகவே இருக்க விடுவது இல்லை. ஏதாவது ஒரு பிரச்சனை கொடுத்து கொண்டே இருக்கிறான் என வருத்தப்படுகிறாள். இதனால் ரேவதி அவங்க உங்கள மதிக்கவே மாட்டாங்க அப்படி இருக்கும்போது நீங்க ஏன் அவங்களுக்காக கவலைப்படுறீங்க என்று கேட்க, பாட்டி என் மருமகள் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிறாள். உண்மை தெரிந்தால் நிச்சயம் எல்லாம் சரியாகி விடும், என்ன தான் இருந்தாலும் அவள் என் வீட்டு மருமகள் தான் என்று சொல்கிறாள் அதன் பிறகு கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் பத்திர பேப்பர்களை வாங்கும் கடைக்கு சென்று இவர்கள் குறித்து விசாரிக்க பிறகு சிசிடிவி காட்சிகளை வைத்து யார் என்பதை கண்டுபிடிக்கின்றனர்.

அதன் பிறகு சந்திரகலாவை சந்தித்து, கார்த்திக் விசாரிக்கிறான். ஆனால், அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பேச, கார்த்திக் வீடியோ ஆதாரத்தை காட்டி அதிர்ச்சி கொடுக்கின்றனர். பிறகு கார்த்திக் சந்திரகலாவிடம் காளியம்மாவுக்கு ஃபோன், கார்த்திக் உண்மையை கண்டுபிடித்துவிட்டான் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X