யாரடி நீ மோகினி சீரியலின் முடிவு உங்கள் கையில்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜீ தமிழ் !

சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் தான் யாராடி நீ மோகினி. இத்தொடர் சுமார் 1000க்கும் மேல் எபிசோடுகளைக் கடந்து இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி விரைவில் முடிவடைய உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி,புதுமையான ஒரு யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது இத்தொடரின் முடிவை ரசிகர்களின் கையில் கொடுத்துள்ளது.

ஸ்ரீகுமார்

ஸ்ரீகுமார்

இத்தொடர் முதலில் ஆரம்பமாகும் போது முத்தரசன் வேடத்தில் சஞ்ஜீவ் நடித்து வந்தார். திடீரென இத்தொடரிலிருந்து அவர் விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இத்தொடரின் வெற்றிக்கு இவரின் இயல்பான நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம்.

சித்தியின் வளர்ப்பில்

சித்தியின் வளர்ப்பில்

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முத்தரசன் தாயை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். சித்தியின் மீது மதிப்பும் மரியாதையும் அவருக்கு உண்டு அவர் சொல்வதே வேத வாக்காக எண்ணுகிறான். முத்தரசனின் மனைவி சித்ரா இறந்து விட, தனது அண்ணன் மகளான ஸ்வேதாவை முத்தரசனுக்கு கட்டி வைத்து சொத்துக்களை அடைய சித்தி திட்டமிடுகிறாள்.

வெண்ணிலா

வெண்ணிலா

சிறுவயதிலிருந்தே தன் மாமன் முத்தரசனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவனையே சுத்தி சுத்தி வருகிறாள் வெண்ணிலா. நச்சத்திரா வெண்ணிலா கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார். இந்த தருணத்தில் தனது இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கி வெண்ணிலாவையும் முத்தரசனையும் சேர்த்து வைக்க நினைக்கிறது முத்தரசன் மனைவியின் ஆவி.

செம டஃப் கொடுத்த சீரியல்

செம டஃப் கொடுத்த சீரியல்

ஸ்வேதா, வெண்ணிலா,முத்தரசன், ஆவி இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதே யாராடி நீ மோகினி நெடுந்தொடரின் கதை. தொலைக்காட்சிகளிலேயே முதல் இடத்தில் இருந்து அனைத்து தொலைக்காட்சி சீரியலுக்கும் செம டஃப் கொடுத்தது.

சுவாரசியம் குறைந்தது

சுவாரசியம் குறைந்தது

நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலை பார்த்து ரசிகர்கள் சலிப்பு அடைந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால், ஸ்வேதா மற்றும் அவரது தோழிகளுடன் போடும் திட்டம் விறுவிறுப்பாக சென்று இறுதியில் ஸ்வேதா தோன்றுவிடுவார். இதனால் இத்தொடர் மீதான சுவாரசியம் குறித்து போனது. மேலும், பல நேரத்தில ஸ்வேதா நல்லவளாக மாறிவிட்டது போல காட்டி, இத்தொடர் முடிந்து விடுவதுபோல காட்டி, மீண்டும் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே சென்றதால் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

ஜீ தமிழ் ப்ரோமோ

ஜீ தமிழ் ப்ரோமோ

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி யாரடி நீ மோகினி சீரியல் கிளைமாக்ஸை ரசிகர்களின் கையில் கொடுத்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், முத்தரசன் பேசியுள்ளார். எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பம்னு ஒன்று இருந்துதுன முடிவுனு ஒன்னு இருக்கும், அந்த முடிவு நம்ம மனசுக்கு பிடிச்ச முடிவா இருந்ததுன சந்தோஷம்தான என்று கூறியுள்ளார்.

3 விதமான க்ளைமாக்ஸ்

3 விதமான க்ளைமாக்ஸ்

இதில் 3 முடிவுகளை தயாரிப்பு குழு ஆப்ஷனாக கொடுத்துள்ளது. முதல் ஆப்ஷன் முத்தரசன், வெண்ணிலா இருவரும் ஸ்வேதாவை மன்னித்துவிடுவது, இரண்டாவது ஆப்ஷன் வெண்ணிலா ஸ்வேதாவை பழிவாங்க வேண்டும், 3வது ஆப்ஷன் சித்ராவின் ஆவி ஸ்வேதாவை பழி வாங்க வேண்டும் என 3 விதமான கிளைமாக்ஸ்களை கொடுத்துள்ளார்கள்.

ரசிகர்களின் கையில் முடிவு

ரசிகர்களின் கையில் முடிவு

இந்த மூன்று கிளைமாக்ஸில் ரசிகர்கள் பெருவாரியாக வாக்களித்து தேர்வு செய்யும் கிளைமாக்சை யாரடி நீ மோகினி சீரியலின் கிளைமாக்சை ஷூட் செய்து டெலிகாஸ்ட் செய்யப்படும் என்று அந்த ப்ரோமா வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இதுவரை எந்த தொலைக்காட்சியும் சீரியலின் முடிவை ரசிகர்களிடம் விட்டது இல்லை. முதன்முறையாக இந்த புது முயற்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி கையில் எடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்கள் எந்த முடிவை கொடுக்கிறார்கள் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X