»   »  60 வயதை கடந்த கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் மறுமணம் செய்ய முடிவு

60 வயதை கடந்த கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் மறுமணம் செய்ய முடிவு

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

மும்பை: எழுபதுகளில் பாலிவுட் திரை உலக கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த ஜீனத் அமன் தன்னுடைய 60 வயது வயதில் மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அது காதல் திருமணம் என்றும் ஜீனத் அமன் கூறியுள்ளார்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சிப் புயலாய் தோன்றி ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் ஜீனத் அமன். அவருக்கு என்று ரசிகர் பட்டாளமே உருவானது.

பரபரப்பாக இருக்கும் போதே இந்தி நடிகர் சஞ்சய் கான் என்பவரை திருமணம் செய்த ஜீனத் அமான், அவரை விவாகரத்து செய்தார். இரண்டாம் முறையாக நடிகர் மசார் கான் என்பவரை மணந்துக் கொண்டார்.ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மசார் கான், கடந்த 1988ம் ஆண்டு மரணமடைந்தார். இப்போது 60 வயதாகும் ஜீனத் அமன் மறுமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூக்கத்தை கெடுத்த ஜீனத்

தூக்கத்தை கெடுத்த ஜீனத்

1970ம் ஆண்டு ‘மிஸ் ஆசியா' பட்டம் வென்று மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தவர் ஜீனத் அமான். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் ‘ஹல் சுல்', ‘ஹங்காமா' போன்ற இந்தி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

கவர்ச்சிப் புயலாய் நுழைந்தவர்

கவர்ச்சிப் புயலாய் நுழைந்தவர்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் தாராளமான கவர்ச்சியை காட்டி ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இவர் சுமார் 70 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இரண்டு முறை திருமணம்

இரண்டு முறை திருமணம்

நடிகை ஜீனத் அமனின் முதல் திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக இல்லை. விவாகாரத்தில் முடியவே நடிகர் மசார் கான் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

மசார் கான் - ஜீனத் அமான் தம்பதியருக்கு பிறந்த 2 மகன்கள் பிறந்தனர். ஆனால் மசார் கான், கடந்த 1988ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார். முத்த மகனுக்கு தற்போது 26 வயதும் இளையவருக்கு 23 வயதும் நடக்கின்றது.

60 வயதில் காதல்

60 வயதில் காதல்

ஜீனத் அமான், சமீபத்தில் ஹிண்டுஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தபோது தன்னுடைய மணம் கவர்ந்த ஒருவரை மறுமணம் செய்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

கணவர் இறந்த பின்னர் மறுமணம் பற்றி சிந்திக்காமல், பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் என் மனதை கவர்ந்துவிட்டார். எனது இன்ப துன்பங்களில் துணை நிற்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இளமையாக உணர்கிறேன்

இளமையாக உணர்கிறேன்

நான் ஒரு இந்தியரைத்தான் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன். என் மகன்களும் இந்த திருமணத்துக்கு சம்மதம் வழங்கி விட்டனர்.அவர்களின் சம்மதமும் கிடைத்ததும் நான் முன்னைப் போல் இளமையாகி விட்டாதாகவே உணர்கிறேன். இந்த திருமணத்துக்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

சினிமா சின்ன விஷயம்

சினிமா சின்ன விஷயம்

இப்பொழுதும் தான் அழகாகவே இருக்கிறேன். ஆனால் தன் வாழ்க்கையில் சினிமா சின்ன விசயமாகிவிட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் கவர்ச்சி நாயகி ஜீனத் அமன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Marriage was a mistake she had promised never to make again, but as the cliché goes, time is a great healer. And so 60-year-old Zeenat Aman, glamour goddess of the silver screen and mother of two 20-somethings, will soon marry the man of her dreams.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more